கவிக்கோ முனைவர் அபுதுல் இரகுமான் உடல் நலக்குறைவால் இன்று (வைகாசி 19, 2048 / சூன் 02, 2017) அதிகாலை காலமானார். (ஐப்பசி 24, 1968 / நவம்பர் 09, 1937) அன்று பிறந்த கவிக்கோ, ”வானம்பாடி” இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
அப்துல் ரகுமான், (நவம்பர் 9, 1937 – சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். ‘வானம்பாடி’ இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலை நிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
1960க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
பிறப்பு :
அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
கல்வி :
அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார். அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
பணி :
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார். அப்பொழுது தமிழகத்தில் இருந்த ஐந்து இசுலாமியக் கல்லூரிகளுக்கு விரிவுரையாளர் பதவிக்காக விண்ணப்பித்தார். அவற்றுள் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் வாய்ப்புக் கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக உயர்ந்து 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார். கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, சாகித்திய அகாதமி விருது, உமறுப்புலவர் விருது முதலான 16 விருதுகளைப் பெற்றவர்.
வ.எண் | ஆண்டு | நூல் | வகை | குறிப்பு |
---|---|---|---|---|
01 | 1974 | பால்வீதி | கவிதை | |
02 | 1978 | நேயர் விருப்பம் | கவிதை | |
03 | 1985 | கரைகளே நதியாவதில்லை | கட்டுரை | சூனியர் விகடனில் வெளிவந்த தொடர் |
04 | 1986 | அவளுக்கு நிலா என்று பெயர் | கட்டுரை | சூனியர் விகடனில் வெளிவந்த தொடர் |
05 | 1986 | முட்டைவாசிகள் | கட்டுரை | சூனியர் விகடனில் வெளிவந்த தொடர் |
06 | 1986 | மரணம் முற்றுப்புள்ளி அல்ல | கட்டுரை | சூனியர் விகடனில் வெளிவந்த தொடர் |
07 | 1987 | விலங்குகள் இல்லாத கவிதை | கட்டுரை | |
08 | 1987 | சொந்தச் சிறைகள் | வசன கவிதை | சூனியர் விகடனில் வெளிவந்த தொடர் |
09 | 1989 | புதுக்கவிதையில் குறியீடு | ஆய்வு | முனைவர் பட்ட ஆய்வேடு |
10 | 1989 | சுட்டுவிரல் | பாடல் | |
11 | 1990 | கம்பனின் அரசியல் கோட்பாடு | ஆய்வு | |
12 | 1995 | ஆலாபனை | கவிதை | சாகித்திய அகாதமி விருது பெற்றது. பாக்யா இதழில் வெளிவந்த தொடர். |
13 | 1998 | பித்தன் | கவிதை | குங்குமத்தில் வெளிவந்த தொடர் |
14 | 1998 | விதைபோல் விழுந்தவன் | கவியரங்கக் கவிதைகள் | அண்ணா கவியரங்கக் கவிதைகள் |
15 | 1998 | முத்தமிழின் முகவரி | கவியரங்கக் கவிதைகள் | மு. கருணாநிதியைப் புகழ்ந்து பாடியவை |
16 | 1999 | பூப்படைந்த சபதம் | கட்டுரை | |
17 | 1999 | தொலைப்பேசிக் கண்ணீர் | கட்டுரை | |
18 | 2003 | காற்று என் மனைவி | கட்டுரை | |
19 | 2003 | உறங்கும் அழகி | கட்டுரை | |
20 | 2003 | நெருப்பை அணைக்கும் நெருப்பு | கட்டுரை | |
21 | 2003 | பசி எந்தச் சாதி | கட்டுரை | |
22 | 2003 | நிலவிலிருந்து வந்தவன் | கட்டுரை | |
23 | 2003 | கடவுளின் முகவரி | கட்டுரை | |
24 | 2003 | முத்தங்கள் ஓய்வதில்லை | கட்டுரை | |
25 | 2004 | காக்கைச் சோறு | கட்டுரை | |
26 | 2004 | சோதிமிகு நவகவிதை | கட்டுரை | |
27 | 2004 | மின்மினிகளால் ஒரு கடிதம் | கவிதை | கஜல் கவிதைகள் |
28 | 2005 | தாகூரின் ‘சித்ரா’ | மொழிபெயர்ப்பு | |
29 | 2005 | ரகசிய பூ | கவிதை | |
30 | 2005 | சிலந்தியின் வீடு | கட்டுரை | |
31 | 2005 | இது சிறகுகளின் நேரம் | கட்டுரை | சூனியர் விகடனில் வெளிவந்த தொடர் |
32 | 2006 | இல்லையிலும் இருக்கிறான் | கட்டுரை | |
33 | 2006 | பறவையின் பாதை | கவிதை | |
34 | 2007 | இறந்ததால் பிறந்தவன் | கவியரங்க கவிதை | முதல் தொகுதி |
35 | 2008 | தட்டாதே திறந்திருக்கிறது | கட்டுரை | |
36 | 2010 | எம்மொழி செம்மொழி | கட்டுரை | |
37 | 2010 | பூக்காலம் | கட்டுரை | |
38 | 2011 | தேவகானம் | கவிதை | |
39 | கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை | கவிதை | ||
40 | 2013 | பாலை நிலா | கவிதை |
கவிக்கோ என அழைக்கப்படும் அப்துல் ரகுமானுக்கு பல்வேறு விருதுகள் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டன. அவை வருமாறு:
வ.எண் | ஆண்டு | விருது | வழங்கியவர் | குறிப்பு |
1 | 1986 | கவியரசர் பாரிவிழா விருது | குன்றக்குடி அடிகளார் | |
2 | 1989 | தமிழன்னை விருது | தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் | இவ்விருது புதுக்கவிதைக்காக வழங்கப்பட்டது |
3 | 1989 | பாரதிதாசன் விருது | தமிழக அரசு | |
4 | 1989 | கலைமாமணி விருது | தமிழக அரசு | |
5 | 1992 | அக்ஷர விருது | அக்னி | |
6 | 1996 | சிற்பி அறக்கட்டளை விருது | கவிஞர் சிற்பி அறக்கட்டளை | |
7 | 1997 | கலைஞர் விருது | தி. மு,க. | ஒரு இலட்சம் ரூபாய் |
8 | 1998 | ராணா இலக்கிய விருது | ||
9 | 1999 | சாகித்ய அகாடமி விருது | சாகித்ய அகாடமி, டெல்லி | ஆலாபனை கவிதைத் தொகுதிக்காக வழங்கப்பட்டது |
10 | 2006 | கம்ப காவலர் | கொழும்பு கம்பன் கழகம், இலங்கை | |
11 | 2007 | பொதிகை விருது | பொதிகை தொலைக்காட்சி, சென்னை | |
12 | 2007 | கம்பர் விருது | கம்பன் கழகம், சென்னை | |
13 | 2007 | சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு | தினத்தந்தி நாளிதழ் | ஒரு இலட்சம் ரூபாய் |
14 | 2008 | உமறு புலவர் விருது | ஒரு இலட்சம் ரூபாய் |