ஏறுதலுவுதலால் சட்ட சிக்கல்களுக்கு இடையேயும் அலங்காநல்லூரில் புதுப்பொலிவு பெறும் வாடிவாசல் !

ஏறுதலுவுதலால் சட்ட சிக்கல்களுக்கு இடையேயும் அலங்காநல்லூரில் புதுப்பொலிவு பெறும் வாடிவாசல் !

ஏறுதலுவுதலால் சட்ட சிக்கல்களுக்கு இடையேயும் அலங்காநல்லூரில் புதுப்பொலிவு பெறும் வாடிவாசல் !

பல்வேறு சட்ட சிக்கல்களுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஏறுதலுவுதல் (ஜல்லிக்கட்டு) நடக்குமா? நடக்காதா? என்ற விவாதம் ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் மதுரை அருகே உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஏறுதலுவுதலுக்காக அந்தக் கிராமத்தின் வாடிவாசலுக்கு வர்ணம் தீட்டப்பட்டு புதுப் பொலிவுடன் திகழ்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்ட கிராமங்களில் தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஏறுதலுவுதல் களைகட்டும். இதில் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு போன்ற பகுதிகளிலும் ஏறுதலுவுதல் விளையாட்டை காண, தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள்.

உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஏறுதலுவுதல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.16-ஆம் தேதி நடக்கும். நீதிமன்ற தடையால் கடந்த 2 ஆண் டாக, அலங்காநல்லூரில் ஏறுதலுவுதல் நடக்கவில்லை. இந்த ஆண்டும் ஏறுதலுவுதல் நடத்த உச்ச நீதிமன்றம் தற்போது வரை அனுமதி வழங்கவில்லை. இந்த ஆண்டு ஏறுதலுவுதல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கும் என, காளைகளின் உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


ஆனால், பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட போதும் ஏறுதலுவுதல் தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் தற்போது வரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற ஆதங்கம், மாடு பிடி வீரர்கள், மாடு வளர்ப்போரிடையே ஏற்பட் டுள்ளது. அதனால், கடந்த இரண்டு மாதமாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் கிராமங்களில் ஏறுதலுவுதல் நடத்த கிராம பொதுமக்கள், ஏறுதலுவுதல் ஆர்வலர்கள், மாடு பிடி வீரர்கள், மாடு வளர்ப்போர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, அரசியல் கட்சிகளும், ஏறுதலுவுதல் நடத்த போராட்டங்களை அறிவித்துள்ளன. ஸ்டாலினைத் தொடர்ந்து விஜயகாந்த், ஜி.கே.வாசனும் போராட்டம் நடத்த ஆயத்தமாகி வருகின்றனர். தொடர்ந்து அரசியல் கட்சியினர் ஏறுதலுவுதல் போராட்டத்தில் குதித்துள்ளதால் ஏறுதலுவுதல் மீது கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் அலங்காநல்லூரில் ஏறுதலுவுதலுக்கு தயார் செய்வது போல் வாடிவாசல் புதுப் பொலிவுப்படுத்தப்படுகிறது. வாடிவாசல் சுவரில், ‘காளையை அடக்கும் வீரர்’ போல் வர்ணம் தீட்டப்படுகிறது. மாடுகளை அடைத்து வைக்கப்படும் வாடிவாசல் படி சுவர்களும் வெள்ளையடிக்கப்பட்டு அழகுப் படுத்தப்படுகின்றன.

ஏறுதலுவுதல் காளை வளர்க்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் கூறுகையில் ;

இது குறித்து ஏறுதலுவுதல் காளை வளர்க்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் கூறுகையில், மு.க.ஸ்டாலின் ஏறுதலுவுதலுக்கு ஆதரவாக நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வருகிறார். அவரது வருகைக்கும், வாடிவாசல் புதுப் பொலிவுப்படுத்தப்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாரம்பரியமாக நடக்கும் விளையாட்டு என்பதால் ஏறுதலுவுதலுக்கு நடக்கிறதோ, நடக்கவில்லையோ வாடிவாசலை ஆண்டு தோறும் புதுப்பிப்போம். அலங்காநல்லூரில் மட்டும் 1000 காளைகள் இருக்கின்றன. ஏறுதலுவுதல் தடை நீங்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த காளைகளைத் தயார்ப்படுத்தி வருகிறோம் என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: