புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்: ஈரோடு கலை -அறிவியல் கல்லூரியில் டிச. 6, 7-இல் நடைபெறுகிறது!

புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்: ஈரோடு கலை -அறிவியல் கல்லூரியில் டிச. 6, 7-இல் நடைபெறுகிறது!

புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம்: ஈரோடு கலை -அறிவியல் கல்லூரியில் டிச. 6, 7-இல் நடைபெறுகிறது!

புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம், ஈரோடு கலை -அறிவியல் கல்லூரியில் டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இது குறித்து கல்லூரி முதல்வர் இரா.வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இருந்தும், இலங்கையில் இருந்தும் புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா, டென்மார்க், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக, உலகம் முழுவதும் பரவியுள்ள ஈழத் தமிழர்கள் தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் வாழ்வில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளை கவிதைகள், நாவல்கள் உள்ளிட்ட படைப்புகளாக அவர்கள் படைத்து வருகின்றனர்.

அந்த வகையில், டென்மார்க்கில் வாழும் ஈழத்துப் படைப்பாளி வீ.ஜீவகுமாரன் சிறுகதை, நாவல் என இதுவரை 10 படைப்புகளை உருவாக்கியுள்ளார். புலம்பெயர்ந்த படைப்பாளர்களின் படைப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையிலும், டென்மார்க் எழுத்தாளர் வீ.ஜீவகுமாரனை கெளரவிக்கும் வகையிலும், பன்னாட்டுக் கருத்தரங்கத்தை ஈரோடு கலை -அறிவியல் கல்லூரியில் டிசம்பர் 6, 7 ஆகிய நடத்த முடிவு செய்துள்ளோம்.
‘புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள்’, ‘டென்மார்க் வீ.ஜீவகுமாரனின் படைப்புகள்’ என்னும் இரு தலைப்புகளில், இக்கருத்தரங்கில் தங்களது கட்டுரைகளை இலக்கிய ஆர்வலர்கள் சமர்ப்பிக்கலாம். இக்கருத்தரங்கை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம. இராசேந்திரன் தொடங்கி வைக்கவுள்ளார்.

டென்மார்க் தமிழ் எழுத்தாளர் ஜீவகுமாரன் இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகிறார். இலங்கை எழுத்தாளர் ஞானசேகரன், புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஹரி பாலசுப்பிரமணியம், புதுவை தமிழ் பல்கலைக்கழக தமிழியல் துறை பேராசிரியர் ரவிகுமார், தஞ்சை தமிழ் பல்கலை. அயல்மொழித் துறை பேராசிரியர் தே.வெற்றிச்செல்வன் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கின்றனர். நிறைவு நாளில் மக்கள் சிந்தனைப் பேரவையின் மாநிலத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.

இக்கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புவோர் 99408 72271, 94424 62601 என்ற செல்லிடப்பேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம். கட்டுரைகளை அனுப்ப நவம்பர் 2 கடைசி தேதி ஆகும் என்றார் அவர்.

கருத்தரங்க ஏற்பாடுகளை கல்லூரிச் செயலர் கே.கே.பாலுசாமி, கருத்தரங்க இயக்குநர் க.பன்னீர்செல்வம், வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ப.சிவசுப்பிரமணியன், கணினியியல் துறைத் தலைவர் சு.பன்னீர்செல்வம், பொருளாதாரத் துறைத் தலைவர் நா.மணி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: