கனடாவில் நடந்த, மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்று சாதித்த மதுரையை சேர்ந்த கணேசன்!

கனடாவில் நடந்த, மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்று சாதித்த மதுரையை சேர்ந்த கணேசன்!

கனடாவில் நடந்த, மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்று சாதித்த மதுரையை சேர்ந்த கணேசன்!

தேசம் கடந்து சாதித்தார் உசிலம்பட்டி ‘தங்க மகன்’. உசிலம்பட்டி, கனடாவில் நடந்த, உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கான, சர்வதேச தடகள போட்டிகளில், குண்டு, வட்டு, ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையை சேர்ந்த கணேசன், (36). இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இவர், சராசரி மனிதர்களை விட உயரம் குறைவானவர். கனடாவின் டொராண்டோவில் நடந்த சர்வதேச தடகள போட்டிகளில் குண்டு, வட்டு, ஈட்டி எறிதலில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றார். அன்மையில் ஊர் திரும்பிய இவருக்கு, கிராமத்தினர் மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.

கணேசன் கூறியதாவது: “பத்தாம் வகுப்பு வரை படித்தேன். விவசாயம் போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தேன். சில ஆண்டுகளுக்கு முன், மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்சியாளரின் அறிமுகம் கிடைத்தது. அவர் மூலம் தடகள பயிற்சிகளை, மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பெற்றேன். தொடர்ந்து, சர்வதேச தடகள போட்டிகளில் கலந்து கொள்ள பணம் திரட்டுவதே, கடினமாக இருந்தது. ஒரு வழியாக கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளேன். அரசு உதவி கிடைத்தால் மேலும் சாதனை படைப்பேன்”. இவ்வாறு கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>