இன்னும் பழமையை உணர்த்துகிறது ‘ரேடியோ ஹவுஸ்’ காஞ்சியில் நாட்டு நடப்புகளை அறிவித்தது !

இன்னும் பழமையை உணர்த்துகிறது 'ரேடியோ ஹவுஸ்' காஞ்சியில் நாட்டு நடப்புகளை அறிவித்தது !

இன்னும் பழமையை உணர்த்துகிறது ‘ரேடியோ ஹவுஸ்’ காஞ்சியில் நாட்டு நடப்புகளை அறிவித்தது !

காஞ்சிபுரம் :

சுதந்திர போராட்ட காலத்தில், நாட்டின் நடப்புகளை பொது மக்கள் தெரிந்து கொள்வதற்காக காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்ட, ‘ரேடியோ ஹவுஸ்’ கட்டடம், இன்னும் அப்படியே இருக்கிறது. ஆனால் அது இருக்கும் இடம் தான் பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலும் நாட்டு நடப்புகள் பற்றி மக்கள் தெரிந்து கொள்வதற்காக ரேடியோ மூலம் செய்தி ஒலிபரப்பப்பட்டது. சுதந்திரம் கிடைத்த பின் அந்த வசதி விரிவுபடுத்தப்பட்டது.

சுதந்திரத்திற்கு முன், ரேடியோ வைத்திருப்பவர்கள் தான் பெரிய வசதி படைத்தவர்களாக கருதப்பட்டனர். அதன் பின் பெரிய நகரங்களில் அரசு சார்பில், ரேடியோ நிலையத்திற்கு என, தனி கட்டடம் கட்டி, செய்தி நேரத்தில் மக்கள் தெரிந்து கொள்ளும் வசதி ஏற்படுத்தினர். அந்த வகையில், காஞ்சிபுரம் நகராட்சியில், பெரிய காஞ்சிபுரம் தேரடி அருகில் அய்யாசாமி பூங்கா, ரயில்வே சாலையில், கந்தன் பூங்கா ஆகிய இடங்களில், 1946ம் ஆண்டு ரேடியோ ஹவுஸ் அமைக்கப்பட்டது. மாலை நேரத்தில் செய்தி ஒலிபரப்பாகும். அந்த நேரத்தில், நகராட்சியில் நியமிக்கப்பட்டவர், அறையை திறந்து, ரேடியோவை இயக்குவார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக கையளவு, மொபைல் போனில் நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அந்த கால ஞாபகம், அதை அனுபவித்தவர்களுக்குத் தான் உணர முடியும். இந்த காலத்தில் வசிக்கும் இளைய தலைமுறையினருக்கு அது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.அதுபோலவே, ரேடியோ ஹவுஸ் இருந்த இடமும் பெரும்பாலானோருக்கு தெரியாத நிலை உள்ளது. அந்த கட்டடத்தில் தான், நகராட்சி சுகாதார அலுவலகம் இயங்குகிறது.

பகுதிவாசி கூறியதாவது :

நான் சிறுவனாக இருந்த போது, தினமும் பல பெரியவர்கள் இந்த பூங்காவுக்கு வருவர். எங்கள் வீடு பூங்கா பக்கத்தில் இருப்பதால் அதில் ஒலிபரப்பப்படும் நாதஸ்வரம் இசை மற்றும் செய்திகள் எங்களுக்கு நன்கு கேட்கும். அப்போது இந்த தெருவில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது. இந்த பகுதியில் கடை வைத்திருப்பவர் மற்றும் நெசவாளிகள் மாலை நேரத்தில் வழக்கமாக வருவர். மாலை, 6:00 முதல், 7:30 மணி வரை ரேடியோ சத்தம் கேட்கும். அதன் பின் மூடிவிடுவர். 1969 வரை இந்த ரேடியோ ஹவுஸ் செயல்பட்டது. அப்போது எங்களுக்கு செய்தி கேட்டாலே ஆச்சரியமாக இருந்தது. சினிமா பாட்டு எல்லாம் அப்போது கிடையாது. நாங்கள் ரேடியோவை நேரடியாக பார்த்தது கூட கிடையாது. ஒரு சிலர் வீட்டில் மட்டும் இருக்கும். பின்னர் ரேடியோ பல வீடுகளில் வந்தவுடன், இந்த பூங்காவுக்கு வரும் கூட்டமும் குறைந்து; முற்றிலும் முடப்பட்டது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: