திருச்சி மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துக்கள் கருப்பு மை பூசி அழிப்பு!

திருச்சி மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துக்கள் கருப்பு மை பூசி அழிப்பு!

திருச்சி மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி எழுத்துக்கள் கருப்பு மை பூசி அழிப்பு!

திருச்சி சர்வதேச விமான நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலுள்ள பெயர் பலகைகளில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்கள் கருப்பு மைபூசி அழிக்கப்பட்டுள்ளன. திருச்சியிலுள்ள பாரத் பாரத மிகு மின் நிலையம், துப்பாக்கி தொழிற்சாலை, கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்கள், சர்வதேச விமான நிலையம், அகில இந்திய வானொலி, ரயில் நிலையம், வருமான வரித்துறை, சுங்கத்துறை, தொலைதொடர்பு துறை, அஞ்சல் துறை மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை திருச்சி விமான நிலையம் முன்னுள்ள பெயர் பலகை, கன்டோன்மென்ட் பிஎஸ்என்எல் அலுவலக வாடிக்கையாளர் சேவை மைய முன்னுள்ள பெயர் பலகை உள்ளிட்டவற்றில் இந்தி எழுத்துகள் மட்டும் கருப்பு மை பூசி அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி எழுத்துகள் கருப்பு மை பூசி அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • நன்றி : தமிழ் இந்து
Tags: