அமெரிக்கா வாழ் தமிழர்களை ஆங்கிலப் பேச்சால் அசரவைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

அமெரிக்கா வாழ் தமிழர்களை ஆங்கிலப் பேச்சால் அசரவைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

அமெரிக்கா வாழ் தமிழர்களை ஆங்கிலப் பேச்சால் அசரவைத்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

அமெரிக்கா வாழ் தமிழர்களுடன் சரளமாக ஆங்கிலத்தில் பேசி அசத்தியுள்ளனர், அரசுப் பள்ளி மாணவர்கள். ஆசிரியர்களின் புது முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடி கிராமத்தில் அமைந்துள்ளது அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில், 120 மாணவ- மாணவியர் பயின்றுவருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டது. இதனால், மாணவர்கள் பெரிதும் பயனடைந்தனர். மாணவர்களின் ஆங்கில உரையாடல்கள், பள்ளிகளில் நடைபெறும் ஆங்கில நாடகங்கள் ஆகியவற்றைப் பள்ளியின் ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதைப் பார்வையிட்ட அமெரிக்கா வாழ் தமிழர்கள், ‘எனது கிராமம் சமூக மேம்பாடு’ என்ற இலக்கில் இப்பள்ளியைத் தேர்வுசெய்து, வாரத்தில் 5 நாள்கள் ஸ்கைப் மூலம் மாணவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடிவருகின்றனர். மாலை மூன்றரை மணி முதல் நாலரை மணி வரை வகுப்புகள் நடைபெறுகின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

தினம் ஒருவர் ஸ்கைப் மூலம் வெவ்வேறு தலைப்புகளில் மாணவர்களுடன் நேரிடையாகப் பேசுகின்றனர். ஆங்கிலத்தில் பேசுவது, நல்லொழுக்கம், சாதனை மனிதர்களின் கதைகள், சமூக மேம்பாட்டில் மாணவர்களின் பங்கு, பொது அறிவு, சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுடன் பேசுகின்றனர். மாணவர்களின் கேள்விகளுக்கு ஸ்கைப் மூலம் பதில் தருகின்றனர். மாணவர்களை ஆங்கிலத்தில் பேசச் சொல்லி, பேச்சு மொழியை எளிமையாக்குகின்றனர். அரியலூர் மாவட்டத்திலேயே இப்பள்ளியில் மட்டும்தான் மாணவர்கள் ஸ்கைப் மூலம் கல்வி பயின்று வருகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: