கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடர அரசு நடவடிக்கை!

கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடர அரசு நடவடிக்கை!

கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடர அரசு நடவடிக்கை!

”சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடரவும், அங்கு கிடைத்த பொருட்களை, அங்கேயே ஆய்வு செய்யவும், பாதுகாக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., – ராமச்சந்திரன்:

சென்னை, சோழிங்கநல்லுாரில், செம்மொழி ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, எந்தப் பணியும் நடைபெறாமல் உள்ளது. ஆய்வு மையத்திற்கு தேவையான நிதி ஒதுக்கி, பல மொழி நுால்களை மொழிபெயர்க்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்:

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்:

தமிழர் பண்பாட்டை எடுத்துரைக்கும், கீழடி அகழ்வாராய்ச்சிக்கு, மத்திய அரசு நிதி வழங்கவில்லை. அகழ்வாராய்ச்சியில் முழுமையாக ஈடுபட்ட ஆய்வாளர்களை மாற்ற முயற்சி நடக்கிறது. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை, மைசூருக்கு மாற்ற முயற்சி நடப்பதாக தெரிகிறது; அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

அமைச்சர் செங்கோட்டையன்:

கீழடி அகழ்வாராய்ச்சி தொடரவும், அங்கு கிடைத்த பொருட்களை அங்கேயே வைத்து ஆய்வு செய்யவும், அவற்றை பாதுகாக்கவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

கீழடி அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை தமிழகத்திலேயே வைத்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் கீழடி ஆராய்ச்சிக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், அந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் மாற்றபட்டுள்ளது பற்றியும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழங்கால பொருட்களை பாதுகாக்க ஏற்கனவே 72 சென்ட் இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2 ஏக்கர் நிலம் வழங்க அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார். கீழடியில் கிடைக்கபெற்ற பொருட்களை ஆய்வுக்காக மைசூர் எடுத்து செல்ல முயற்சித்தபோது அதை தடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசுக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதியதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

மேலும், அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை, தமிழகத்திலேயே ஆய்வு செய்ய மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: