கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி தொடக்கம்!

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணி தொடக்கம்!

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்க விழா நேற்று (14-06-2019) நடைபெற்றுள்ளது.

தமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் அகழாய்வுப் பணிகளை தொடக்கி வைத்திருக்கிறார்.

”2014 -2017 வரையிலான மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது.அதில் உறைகிணறுகள் , செங்கல் கட்டடங்கள், பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தந்தத்தால் ஆன பொருள்கள் உள்பட 7818 தொல் பொருள்கள் கிடைத்துள்ளன.

2018-ம் ஆண்டில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பாசி, மணிகள், தங்கத்தால் ஆன பொருள்கள், மான்கொம்பு, இரும்புக் கருவிகள் உள்ளிட்ட 5280 தொல்பொருள்கள் கிடைத்தன.

இந்நிலையில் ஏழு ஏக்கர் பரப்பளவில் 47 லட்சம் மதிப்பீட்டில் ஐந்தாவது கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கீழடி ஆற்றங்கரை மற்றும் நகர்ப்புற நாகரிகம் கொண்ட இடம்.

இதில் கிடைக்கும் தொல்பொருள்கள் மற்றும் ஏற்கனவே கிடைத்தவை கீழடியில் இரண்டு ஏக்கர் 10 சென்ட் பரப்பளவில் அமையவுள்ள அகழ் வைப்பகத்தில் விரைவில் காட்சிப்படுத்தப்படும்.

சிகாகோவில் நடைபெற உள்ள உலக தமிழ் மாநாட்டுக்கு ‘கீழடி என் தாய் மடி’எனப் பெயர் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அத்தககைய சிறப்பு வாய்ந்த கீழடி அகழாய்வுப் பணி எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது” என பாண்டியராஜன் பேசியுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: