பண்டைய கல்வெட்டுகளை ஆராய்ந்து தமிழர்களின் நாகரிகங்களை அறிவதில் ஆர்வம் காட்டி வருகிறார் விழுப்புரத்தில் வசிக்கும் பெண் ஆராய்ச்சியாளர் மங்கையர்கரசி. பண்டைய காலத்தில் சேவலுக்கும், கோழிக்கும் நடுகல் அமைக்கப்பட்டுள்ளதை கல்வெட்டு மூலம் கண்டறிந்துள்ளார்.
விழுப்புரம் அருகே அரசலாபுரத்தில் கோழிக்கு நடுகல் அமைத்த கல்வெட்டு, திருக்கோவிலூர் அருகே ஆவியூர் சேவலுக்கு நடுகல் அமைத்த கல்வெட்டு, பண்ருட்டியில் விக்கிரம சோழன் குறித்த கல்வெட்டு என 1992-ம் ஆண்டு வரை புதிதாக 12 கல்வெட்டுகளைக் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளார். மேலும் 8 பாறை ஓவியங்கள், 36 ஏரி கல்வெட்டுகள், 12 தனி கல்வெட்டுகள், 14 கோயில் கல் வெட்டுகள், துர்க்கை, அய்யனார், சப்தமாதா, விநாயகர், லகுலீஸ்வரர் என இதுவரை 153 சிற்பங்களையும் 29 நடுகல்லையும் கண்டுபிடித்துள்ளார்.