You are here:Homeதமிழகம்வ.உசி ஐயாவிற்கு முழு உருவச் சிலை உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதலமைச்சரை பல்வேறு சங்க அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
வ.உசி ஐயாவிற்கு முழு உருவச் சிலை உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக முதலமைச்சரை பல்வேறு சங்க அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 150 ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் வ.உ.சி அவர்களுக்கு மார்பளவு சிலை, தூத்துக்குடி மாநகர் மேல பெரிய காட்டன் சாலைக்கு வ.உ.சிதம்பரனார் சாலை எனப் பெயர் மாற்றம், கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் பூங்காவில் வ.உ.சி முழு உருவச் சிலை உள்ளிட்ட 14 அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வ.உ.சி பேரவை அமைப்புச் செயலாளர் திரு. ரவி மற்றும் பல்வேறு சங்க அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரு. அப்பு சந்திரசேகரன், திரு. ஹரிஹரன், திரு. கே.பி.கே. செல்வராஜ் உள்ளிட்டோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
சென்னையில் இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், மேலும் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலினையும் பல்வேறு சங்க அமைப்பினர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்
வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கப்பலோட்டிய தமிழன் பெயரில் சிறப்பு விருது வழங்கப்படும், சென்னை, கோவையில் வ.உ.சி.க்கு சிலை நிறுவப்படும், அவர் மறைந்த தினம் தியாக திருநாளாக கொண்டாடப்படும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஓராண்டில் புதிதாக உருவாகும் அரசு கட்டிடத்திற்கு அவர் பெயர் சூட்டப்படும் என்பது உள்ளிட்ட 14 அறிவுப்புகளை சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாள் விழாவினையொட்டி, சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
வருகிற 18ம் தேதி செக்கிழுத்த செம்மல், கப்பலோடிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 80-வது ஆண்டு நினைவு நாளில் நமது உலகத் தமிழர் பேரவை தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும், பெங்களூரிலும், தமிழர்கள் வாழும் ஈழம், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நகரம் இடம் நேரம் தலைமை சென்னை கடற்கரை சாலையில் துறைமுகம் வாயில் (சுங்கத்துறை அலுவலகம் எதிரில்) பகல்…
மதுரை தென்னிந்திய வெள்ளாளர் உறவின் முறை சங்கம் சார்பில் சிம்மக்கல்லில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வெண்கல சிலையை அமைச்சர் தியாகராஜன் திறந்து வைத்தார். வ.உ.சி., சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மதுரை ஆதினம்ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், எம்.பி.,சு.வெங்கடேசன், வ.உ.சி., யின் பேரன் சிதம்பரம், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி,பூமிநாதன், சங்கத் தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாண்டியராஜன், செயலாளர் அசோக்ராஜ், பொருளாளர் பெரியசாமி, நிர்வாகிகள் தனபாலன், சொக்கர், திண்டுக்கல்…
In "தமிழகம்"
Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: Cancel reply