ஏகாம்பரநாதர் கோயில் : 2,500 ஆண்டு பழமையான சிலையை மாற்ற எதிர்ப்பு – கோயிலில் பக்தர்கள் மறியல் போராட்டம்!

ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய உற்சவர் சிலைக்கு கும்பாபிஷேகம்: 2,500 ஆண்டு பழமையான சிலையை மாற்ற எதிர்ப்பு - கோயிலில் பக்தர்கள் தர்ணா போராட்டம்!

ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய உற்சவர் சிலைக்கு குடமுழுக்கு : 2,500 ஆண்டு பழமையான சிலையை மாற்ற எதிர்ப்பு – கோயிலில் பக்தர்கள் தர்ணா போராட்டம்!

காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் புகழ் பெற்ற ஏகாம்பரநாதர் கோயில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டில் அமைந்துள்ளது. இங்கு 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமஸ்கந்தர் உற்சவர் சிலை உள்ளது. இந்த சிலையின் கை பாகத்தில் பின்னம் (விரிசல்) ஏற்பட்டுள்ளதால், சிலையை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும், நன்கொடையாளர்கள் மூலம் புதிய உற்சவர் சிலை அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பழைய சிலையை மாற்றாமல் புதுப்பிக்க வேண்டுமே தவிர புதிய சிலை அமைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், கோயில் நிர்வாகத்தினர் புதிய உற்சவர் சிலைக்கு இன்று குடமுழுக்கு செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சங்கத்தினர் கோயில் நிர்வாகத்திடம் முறையிட சென்றனர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததால் அவர்கள் கோயிலில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து,  சங்கத்தின் சிறப்பு தலைவர்  கூறியதாவது:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய உற்சவர் சிலை செய்வது தொடர்பாக பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கோயிலில் உள்ள பழமை வாய்ந்த உற்சவர் சிலையை விரிசல் எனக்கூறி அறநிலையத்துறை அதிகாரிகள் மாற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இது தொடர்பாக, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் பக்தர்கள் மனு அளித்திருந்தனர்.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கோயில் நிர்வாகத்தினர் புகழ் பெற்ற கோவிலில், தன்னிச்சையாக திடீரென புதிய சிலைக்கு குடமுழுக்கு செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


இதனால், கோயில் நிர்வாகத்தை கண்டித்து மறியலில் ஈடுபட்டோம். மேலும், இக்கோயிலில் உள்ள ஸ்கந்தர் சிலை, பள்ளியறை சிலை களவு போனது தொடர்பாக காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிலை கடத்தல் தொடர்பாக பல்வேறு நபர்கள் சிக்கி வரும் நிலையில், உற்சவர் சிலையை கோயில் நிர்வாகம் மாற்ற முயற்சிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

புகார் மனு தொடர்பாக ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள விளக்கம்:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு வரி விதிப்புகள் மூலம் ஆண்டுக்கு ரூ. 1.3 கோடி வருமானம் வருகிறது. இக்கோயிலில் தற்போதுள்ள உற்சவர் சிலை சேதமடைந்துள்ளது. இந்தச் சிலையை வீதியுலா நேரத்தில் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மூலம் புதிய சிலை அமைக்க ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறை தலைமை  சிற்பி (ஸ்தபதி) முத்தையா, அலுலர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் கோயில் நிதி மூலம் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது. அதேபோல், சோமாஸ்கந்தர் சிலையும் பஞ்சலோகத்தில் செய்ய உரிய உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.

‘புதிய உற்சவர் சிலை ஏற்கெனவே செய்யப்பட்டு விட்டது. அடுத்து வரும் நாட்கள் வழிபாட்டுக்கு தகுந்த நாட்களாக இல்லாததால், ஆணையரின் அனுமதியோடு புதிய சிலைக்கு குடமுழுக்கு செய்ய முடிவு செய்துள்ளோம். நீதிமன்றத்தை அவமதிப்பதாக கூறுவது ஏற்புடையதல்ல’ என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: