திருக்குறளைக் கொண்டு கலாம் ஓவியம் – அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி கலைஞன்!

திருக்குறளைக் கொண்டு கலாம் ஓவியம் - அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி கலைஞன்!

திருக்குறளைக் கொண்டு கலாம் ஓவியம் – அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி கலைஞன்!

எண்ணில் அடங்கா கலைகளுக்கு மத்தியில்தான் நம் அன்றாட வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. அதில் தனது கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் முதல் கலையாக விளங்குவது ஓவியம். ஒரு கதைக்கு உயிர் தருவது ஓவியம் என்பர். சிலர் எழுத்தோவியத்தினை வரைந்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள். அப்படிப்பட்டவர்கள் ஓவியத்தின் மீது அளவு கடந்த பற்றும், நம்பிக்கையும் வைத்திருப்பார்கள். அவர்களைப் போன்ற ஒருவர்தான் சீனிவாசன்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் பிறவியிலேயே ஒரு மாற்றுத்திறனாளி. ஆனாலும் தனது நம்பிக்கையில் ஒரு நாளும் தளர்ச்சி அடையாதவர். சுறுசுறுப்பான நடையும் அன்பான உள்ளத்தையும் கொண்டுள்ளார். தான் எதிலும் சளைத்தவன் அல்ல என்பதற்கு அவர் வென்று குவித்துள்ள மடல்களும் கேடயமும் பாராட்டுச் சான்றிதழும் நான்கு சுவற்றுக்குள் அடைபட்டு அந்த அறையை ஒவ்வொரு நாளும் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறது.

இருபத்தெட்டு வயதான இவர் இளங்கலை ஆங்கிலம் மற்றும் ஓவியத்துக்கான படிப்பையும் பயின்று தன் ஆசிரியரின் துணையுடன் ஓவியத்தை சிறுவயது முதலே தன்னார்வத்துடன் வரைந்து வந்துள்ளார். அப்போதிருந்தே சிறுசிறு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழும் வாங்கியுள்ளார். கரூர் கா.பரமத்திக்கு மிக அருகில் உள்ள லட்சுமிபுரம் என்ற சிறிய கிராமத்தில் வசித்து வருகிறார்.

பல தனியார் கல்லூரிகளுக்குச் சென்று ஒவியத்தை வரைந்து விருதுகளையும் பட்டங்களையும் வென்றவர் அதற்காக கலைமணி, கலைச்சுடர், யுவஸ்ரீ கலாபாரதி விருதையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கிடையே, திருக்குறளைக் கொண்டு எழுத்தோவியத்தின் மூலம் அப்துல் கலாம் படத்தை இவர் வரைந்துள்ளார். இதற்காக தமிழக அரசு இவருக்கு விருது அறிவித்துள்ளது.

இதுகுறித்து சீனிவாசன் கூறுகையில், “நான் சிறுவயதிலிருந்தே ஒவியத்தில் தன்னார்வம் கொண்டவன். விளையாட்டுப் பருவத்தில் என்னால் விளையாடச் செல்ல முடியாது. அதைப் பார்த்து பொழுதுபோக்கத்தான் முடியும். எனது கைகள் இரண்டும் பிறவியிலேயே பாதிக்கப்பட்டதால் என்னால் ஓவியத்தைக் கூட சில நேரங்களில் வரைய முடியாமல் அவதிப்படுவேன். எனக்கு அதிகம் உதவியவர்கள் நண்பர்கள் தான்; உறவுகள் அல்ல”. எத்தனையோ இடங்களுக்குச் சென்று தோல்வியைத் தழுவி உள்ளேன். ஆனால், அதற்கெல்லாம் சளைக்கவில்லை. முயற்சி செய்து கொண்டே இருந்தேன். அதுதான் தமிழ்நாடு அளவிலான அரசு விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நினைக்கிறேன். ஆனால், இன்னும் அந்த விருது என் கைக்கு வந்து சேரவில்லை. அந்த விருது பெறுவதற்கான நோக்கில் நான் கலாம் ஓவியத்தை வரையவில்லை… என்னால் முடியும் என்ற நம்பிக்கையும் கலாம் பிறந்த நாளை முன்னிட்டும்தான் ஓவியத்தை திருக்குறளில் உள்ள ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளையும், நமது நாட்டின் தேசியக்கொடியையும் கொண்டு 68 மணி நேரத்தில் வரைந்து முடித்தேன். நீண்ட நெடிய நேரத்தில் வரையக் கூடிய ஓவியத்தை ஒரு குறுகிய காலத்தில் வரைந்து முடித்தேன். இதைதான் அனுப்பினேன். விருது அறிவித்து ஓராண்டு வரப்போகிறது. ஆனால், இன்று வரை விருது வரவில்லை. என் படிப்புக்கு ஏற்ற வேலையும் கேட்டுப் பார்த்தேன். பலமுறை அரசியல் கட்சிப் பிரமுகர்களையும் கலெக்டர் அலுவலகத்துக்கும் சென்று பார்த்தேன். எந்தப் பயனும் இல்லை” என்று வேதனையுடன் கூறி முடித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>