நாணயங்கள் சேகரிக்கும் பள்ளி மாணவர்: மன திருப்தி அளிப்பதாக பெருமிதம் !

நாணயங்கள் சேகரிக்கும் பள்ளி மாணவர்: மன திருப்தி அளிப்பதாக பெருமிதம் !

நாணயங்கள் சேகரிக்கும் பள்ளி மாணவர்: மன திருப்தி அளிப்பதாக பெருமிதம் !

உத்திரமேரூர் :

பழங்கால நாணயங்களை தொடர்ந்து சேகரித்து வரும் பள்ளி மாணவர், இதனால், தனக்கு பயன் ஏதும் இல்லை என்றாலும், இத்தகைய பணி, தனக்கு மிகவும் மன திருப்தி அளிக்கக்கூடியதாக உள்ளதென கூறியுள்ளார். உத்திரமேரூரில் நடந்த சுகாதார திருவிழாவில், பங்கேற்ற அனைவரும் அசந்து போகும் வகையில், பழங்கால நாணயங்களை கண்காட்சியாக வைத்து, மாணவர், பாலசந்தர், 14, என்பவர் விளக்கினார். செங்கல்பட்டு தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இவர், 2012ம் ஆண்டில் இருந்து நாணயங்கள் சேகரித்து வருகிறார். இவரிடம், 1835ம் ஆண்டு நாணயம் முதல், தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்கள் வரை, 1,500 நாணயங்கள் உள்ளன.

நாணயங்கள் சேகரிக்கும் பள்ளி மாணவர்: மன திருப்தி அளிப்பதாக பெருமிதம் !

நாணயங்கள் சேகரிக்கும் பள்ளி மாணவர்: மன திருப்தி அளிப்பதாக பெருமிதம் !

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.

நான்கு ஆண்டுகளுக்கு முன், சென்னை, தீவுத்திடலில் நடந்த பொருட்காட்சியில், ரிசர்வ் வங்கியின் நாணய கண்காட்சிக்கு என் தந்தை, என்னை அழைத்து சென்றார். அங்கு, பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த சில பழங்கால நாணயங்களை கண்டு, ஆச்சர்யம் அடைந்தேன். தந்தை உதவியுடன் பழங்கால இந்திய நாணயங்களை சேகரிக்க துவங்கினேன். என்னிடம், சோழர் கால நாணயங்கள், கிழக்கிந்திய கம்பெனி நாணயங்கள் போன்றவை உள்ளன. இதை பார்க்கும் முதியோர், ‘அந்த காலத்தில் இந்த பணத்திற்காகத் தான், முதுகெலும்பு ஒடிய உழைத்தோம்’ என கூறி, பழைய நினைவுகளுடன் ஆசையோடு பார்ப்பனர். அப்போது எனக்கு மன நிறைவு ஏற்படும். (பி.பாலசந்தர், பழமத்துார்)

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: