துப்பாக்கி சுடுவதில் தங்கம் வென்று மதுரை மாணவர் சாதனை!

துப்பாக்கி சுடுவதில் தங்கம் வென்று மதுரை மாணவர் சாதனை!

துப்பாக்கி சுடுவதில் தங்கம் வென்று மதுரை மாணவர் சாதனை!

தென்மாநில அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்று மதுரை மாணவர் தர்ஷன், வயது 13, சாதனை படைத்தார். சி.இ.ஓ.ஏ., பள்ளியில் 7 ம் வகுப்பு படிக்கும் இவர், சென்னையில் நடந்த தென்மாநில போட்டியில் பங்கேற்றார். இதில் 15 வயதிற்குட்பட்ட சப்ஜூனியர், 18 வயதிற்குட்பட்ட இளையோர் பிரிவு, 21 வயதிற்குட்பட்ட ஜூனியர் பிரிவு என அனைத்து பிரிவுகளிலும் தனி நபர் போட்டியில் தங்கப்பதக்கமும், குழு போட்டிகளில் வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


அவர் கூறியதாவது: அப்பா பாரதிதாசன் போலீசாக உள்ளார். அப்பா, அம்மா பிரபா ஊக்குவிப்பால் நீச்சல் வீரராக பயிற்சி பெற்றேன். அதில் பல பதக்கங்களை வென்றேன். பின்னர் துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டது. ஒலிம்பிக் போட்டியில் பயன்படுத்தும் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான துப்பாக்கியை பெற்றோர் வாங்கி தந்ததால் இச்சாதனையை படைக்க முடிந்தது. அடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதே எனது இலக்கு, என்றார். இவரை பள்ளி நிறுவனர் ராஜா கிளைமாக்ஸ், சேர்மன் சாமி, தலைமை ஆசிரியர்கள் நஷீம்பானு, கோமலதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>