பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உட்பட 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு!

பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உட்பட 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு!

பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உட்பட 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, தமிழகம் முழுவதும் கடந்த ஒருவார காலமாகக் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடும் போராட்டங்கள் நடப்பதால், தமிழகத்திலிருந்து ஐ.பி.எல் போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் எனப் பலர் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், போராட்டக்காரர்களின் எதிர்ப்பைமீறி, சென்னையில் நேற்று முதல்போட்டி நடைபெற்றது. போராட்டக்காரர்கள், சேப்பாக்கம் மைதானம் இருக்கும் பகுதியை முற்றுகையிட முயன்றனர். மைதானத்துக்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் போராட்டம் நடந்தது. நாம் தமிழர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், எம்.எல்.ஏ-க்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் எனப் பலர் பல பகுதிகளில் போராட்டம் நடத்தினர். மேலும், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், கெளதமன் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் அண்ணாசாலையில் போராட்டம் நடத்தினர். இதனால், சென்னை திருவல்லிக்கேணி, அண்ணாசாலை பகுதிகள் போராட்டக்களமாகக் கட்சியளித்தன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அனுமதியைமீறி மைதானம் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றதால், சில இடங்களில் போலீஸார் தடியடியும் நடத்தினர். மேலும், போராட்டம் நடத்தியவர்கள் கைதுசெய்யப்பட்டனர். நேற்று, ஐ.பி.எல் போட்டிக்கு எதிராகப் போராடியவர்கள் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள்மீது தற்போது சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மைதானத்தில் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் மீது காவலர்களைத் தாக்கியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: