ராமேஸ்வரம் கடற்கரை அருகே ஆயுதப் புதையல்!

ராமேஸ்வரம் கடற்கரை அருகே ஆயுதப் புதையல்!

ராமேஸ்வரம் கடற்கரை அருகே ஆயுதப் புதையல்!

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் கழிப்பறை செப்டிக் தோண்டும் போது, 40 இரும்பு பெட்டிகளில் தானியங்கி துப்பாக்கிகள், புல்லட்டுகள், கண்ணி வெடிகள் உட்பட ஆயுதங்கள் கிடைத்தன.

தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் மீனவர் எடிசன் வீட்டிற்கு செப்டிக் டேங்க் தோண்டினர். அப்போது தரைக்கு அடியில் பிளாஸ்டிக் காகிதங்களில் சுற்றப்பட்ட இரும்பு பெட்டிகள் இருந்தன. இதனை திறந்து பார்த்தபோது பயங்கர ஆயுதங்கள் இருந்தன எடிசன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் தோண்டியபோது நிறைய இரும்பு பெட்டிகள் இருப்பது தெரிய வந்தது. மணல் அள்ளும் இயந்திரம் கொண்டுவரப்பட்டு தோண்டினர். இதில் 40 பெட்டிகள் இருந்தன. இந்த இரும்பு பெட்டிகளில் தானியங்கி துப்பாக்கிகள், அதற்கான 250 புல்லட்டுகள், கடலில் வெடிக்கும் 201 கண்ணி வெடிகள், தரையில் பதிக்கும் கண்ணி வெடிகள் கைப்பற்றப்பட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி., காமினி, எஸ்.பி., ஓம்பிரகாஷ் மீனா, டி.எஸ்.பி., மகேஸ்வரன் வந்தனர். இந்த ஆயுதங்களில் பல மக்கிய நிலையிலும், சில ஆயுதங்கள் மெருகு குலையாமல் பளபளப்புடனும் இருந்தன. ஆயுதங்களின் வீரியத்தன்மை குறித்து நவீன கருவி மூலம் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

1983ல், முதல்வராக எம்.ஜி.ஆர்., இருந்தபோது பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரையிலான கடற்கரைப்பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதப்பயிற்சி மேற்கொண்டனர். அரசியல்காரணங்களால் 1986 ல் விடுதலைப்புலிகளை தமிழகத்தில் இருந்து வெளியேறும்படி எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார். பயிற்சியின்போது விடுதலைப்புலிகள் இந்த ஆயுதங்களை புதைத்து வைத்திருக்கலாம், உடனடியாக வெளியேற்றப்பட்டதால் எடுக்க முடியாமல் விட்டிருக்கலாம், என தெரியவந்துள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: