உலக அளவில் பாரம்பரியமிக்க கலாசாரம் கொண்ட தமிழகத்தின் கவர்னராக பொறுப்பேற்பது மகிழ்ச்சி. பெருமை அளிக்கிறது. என்னால் முடிந்த அளவு தமிழக மக்கள் மற்றும் அரசின் முன்னேற்றத்திற்காக உழைக்க உள்ளேன். தமிழ் மொழியை விரைவில் கற்க முயற்சி செய்வேன். மிகக்குறைந்த காலம் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவம் உள்ளது.
தமிழக அரசுக்கு என் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதோடு, மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படுவேன். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய கொரோனா தடுப்பூசிகளை பெற்று தருவேன். பல்வேறு துறைகளில் அதிகாரியாக பணியாற்றியதால் கவர்னர் பொறுப்பு பெரும் சவாலாக இருக்காது. எளிமையாக இருக்கும்.
தமிழகத்திற்கு சேவையாற்றுவது தான் எனது முதல் பணி. அரசியல் அமைப்பு அதிகாரத்திற்கு உட்பட்டு எனது பணிகள் இருக்கும். தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளது. தமிழக அரசின் ஒட்டு மொத்த செயல்பாடு குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி : தினமலர்