விராலிமலை அருகே பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பு!

விராலிமலை அருகே பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே விவசாயியின் வயிலில் பழங்காலப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விராலிமலை அருகேயுள்ள கூத்தகுடியைச் சோ்ந்தவா் சந்திரன். இவா், அண்மையில் தனக்குச் சொந்தமான வயலில் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கிடைத்த பழங்கால பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக விராலிமலை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற காவலர்கள் மற்றும் வருவாய்த் துறையினா் மண்ணால் மற்றும் உலோகத்தால் ஆன சில பழங்கால பொருள்களை மீட்டு புதுக்கோட்டை தொல்லியல் துறை அலுவலா்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>