தமிழக அரசின் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு!

தமிழக அரசின் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு!

தமிழக அரசின் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் அறிவிப்பு!

தமிழ் மொழி, இலக்கிய வளர்ச்சிக்கு தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழறிஞர்களுக்கு, 2017-ம் ஆண்டுக்கான சித்திரை தமிழ்ப் புத்தாண்டு விருதுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

2017-ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது – பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, கபிலர் விருது – முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியனுக்கும், உ.வே.சா விருது – ச.கிருஷ்ண மூர்த்திக்கும், கம்பர் விருது – சுகி.சிவத்துக்கும், சொல்லின் செல்வர் விருது – முனைவர் வைகைச் செல்வனுக்கும், ஜி.யு.போப் விருது – கோ.ராஜேஸ்வரி கோதண்டம், உமறுப் புலவர் விருது – ஹாஜி எம்.முகமது யூசுபுக்கும், இளங்கோவடிகள் விருது – முனைவர் வெ.நல்லதம்பிக்கும், அம்மா இலக்கிய விருது – முனைவர் மீ.சு.ஸ்ரீலட்சுமிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது அல்டிமேட் மென்பொருள் தீர்வகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டுக்கான மொழி பெயர்ப்பாளர் விருதுகள் நெல்லை சு.முத்து, தி.வ.தெய்வசிகாமணி, ஆ.செல்வராசு (எ) குறிஞ்சி வேலன், முனைவர் ஆனைவாரி ஆனயதன், மறவன் புலவு க.சச்சிதானந்தன், வசயதா சியாமளம், முனைவர் இரா.கு.ஆல்துரை, பேராசிரியர் சி.அ.சங்கரநாராயணன், ஆண்டாள் பிரியதர்ஷினி, முனைவர் தர்லோசன் சிங் பேடி ஆகிய பத்து பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2016 மற்றும் 2017-ம் ஆண்டுக்கான உலக தமிழ்ச் சங்க விருதுகள் :

இலக்கிய விருது – 2016 நா.ஆண்டியப்பன், சிங்கப்பூர். இலக்கண விருது – 2016 பெஞ்சமின் லெபோ, பிரான்ஸ். மொழியியல் விருது – 2016 முனைவர் சுபாஷினி, ஜெர்மனி. இலக்கிய விருது – 2017 முனைவர் சயதிரிகா சுப்ரமணியன், ஆஸ்திரேலியா. இலக்கண விருது – 2017 உல்ரிகே நிகோலசு, ஜெர்மனி. மொழியியல் விருது – 2017 மகாதேவ ஐயர் செயராம சர்மா, ஆஸ்திரேலியா ஆகியவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: