அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு: ரூ.90 கோடி வரி ஏய்ப்பு: முதல் தகவல் அறிக்கையில் தகவல்

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்தை விட 654 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு சொந்தமாக உள்ள 28 இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக ஆட்சியில், வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் அமைச்சராக இருந்த போது, 2011 முதல் 2021 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.90 கோடி அளவுக்கு கே.சி.வீரமணி சொத்துக்களை வாங்கி குவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த அதிரடி ரெய்டு இன்று காலை 6.30 மணியில் இருந்தே நடந்து வருகிறது. கே.சி.வீரமணியின் ஆதரவாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் வீட்டிலும்

சென்னையில் மட்டும் நான்கு இடங்களிலும், மேலும் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் அவருக்கு சொந்தமாக உள்ள, திருமண மண்டபம், வீடு, நட்சத்திர ஓட்டல் உள்ளிட்ட 28 இடங்களில் அதிரடி சோதனையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.  மேலும், பெங்களூரிலும் இவருக்கு சொந்தமான இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி ஆகியோர் வீடுகளிலும் வருமானவரி சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் தற்போது கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: