சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

சிவாஜி பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 25-ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் துறைகள் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

அதன்படி, ‘மெரினாவிலுள்ள அண்ணா சமாதி 4 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்படும். வடகிழக்குப் பருவமழை காலங்களில் அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு, கூவம் மற்றும் கோவளம் ஆற்றுப்படுகைகளில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளான அக்டோபர் 1-ம் தேதி வரும் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். அதேபோல, சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியார் பிறந்தநாளான செப்டம்பர் 16-ம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். பத்திரிகையாளர்கள் பெற்றுவரும் ஓய்வூதியம் 8,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படும். மேலும், பணியின்போது உடல்நலம் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 50,000 ரூபாயிலிருந்து 1,00,000 ரூபாயாக உயர்த்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: