தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பிற மொழிகளில் படித்த ஆசிரியர்கள் பலர் பணிபுரிகின்றனர். தமிழக அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டப்படி 2 ஆண்டுக்குள் டி என் பி எஸ் சி நடத்தும் தமிழ் மொழிக்கான கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: சட்ட விதிகளைப் பின்பற்றி பணியில் சேர்ந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழ் தேர்வை முடிக்காத ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை அறிக்கையாக முதன்மைக் கல்வி அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தமிழ் தேர்வை முடிக்காதவர் கள் மீது துறைரீதியாக தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.