டிஜிட்டல் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்- அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்!

latest tamil news

சென்னை தமிழகத்ததை சிலிகான்வேலியாக மாற்றும் வகையில் டிஜிட்டல் தமிழ்நாடுஎன்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 3 ஆண்டுகளில் 7.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெய்நிகர் அருங்காட்சயகம் உருவாக்கப்படும்.
இது குறித்து தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்து இருப்பதாவது: வளர்ச்சி, முதலீடு,உயர்தர வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய தரவு மைய கொள்கை வெளியிடப்படும் தமிழகத்தை சிலிகான் வேலியாக மாற்றும் வகையில் டிஜிட்டல் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் யூமாஜின் என்ற பெயரில் வருடாந்திர தொழில் நுட்ப உச்சி மாநாடு நடத்தப்படும். அரசின் கொள்கை முடிவுகளுக்கான ஆதரவு அமைப்பு உருவாக்கப்படும். இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா நிறுவப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

நன்றி :தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>