தமிழகத்தில் தொழிற்கல்வியிலும் 7.5% ஒதுக்கீடு: சட்டசபையில் மசோதா தாக்கல்

மருத்துவ படிப்பிற்கு அளித்தது போல இன்ஜினியரிங், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil news

இந்த மசோதாவை அறிமுகம் செய்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த பல ஆண்டுகளாக அரசுப்பள்ளி மாணவர்கள் விரும்பும் உயர்கல்வியை பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. உயர்கல்வியில் அனைத்து மாணவர்களுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதில்லை. ஏழை மாணவர்களின் நலன் கருதி, தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசுகையில், தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவை ஒரு மனதாக நாங்களும் ஆதரிக்கிறோம். பெரும்பாலும் ஏழை, எளிய நடுத்தர குடும்ப மாணவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கின்றனர். அவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : தினமலர்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: