தமிழர் நாகரிகத்தை அடங்கிய கீழடி அகழாய்வு மூடப்பட்டு, இனி 4-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் அறிவிப்பு!

தமிழர் நாகரிகத்தை அடங்கிய கீழடி அகழாய்வு மூடப்பட்டு, இனி 4-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் அறிவிப்பு!

தமிழர் நாகரிகத்தை அடங்கிய கீழடி அகழாய்வு மூடப்பட்டு, இனி 4-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் அறிவிப்பு!

தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை விளக்கும் கீழடியில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அப்போதைய கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2 ஆண்டுகள் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில் சுமார், 2200 ஆண்டுகளுக்கும் அதிக தொன்மையான தமிழர் நாகரீகத்தை வெளிக்கொணரும் அரிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இந்நிலையில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பெங்களூரு கொண்டு செல்ல மத்திய அரசு முயன்றது. அரசியல் தலைவர்களிடையையும், சமூக ஆர்வலர்களிடையேயும் இதற்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. இதே சமயம் தொல்லியல் பணிகளை சிறப்பாக செய்து வந்த, அமர்நாத் ராமகிருஷ்ணன் மத்திய அரசாங்கத்தின் தலையீட்டால் மாற்றப்பட்டார்.

அதன் பிறகு, கீழடி அகழாய்வுப் பணிகளுக்கு ஸ்ரீராம் என்பவரை கண்காணிப்பாளராக நியமித்து அகழாய்வுப் பணிகள் தொடரப்பட்டன. தெற்கு புறத்தில் கட்டடங்களின் மீதம் இருக்கலாம் என அமர்நாத் தலைமையிலான குழுவினர் கணித்திருந்த நிலையில், ஸ்ரீராம் தலைமையிலான குழுவினர் வடக்கு புறத்தில் அகழாய்வு மேற்கொண்டது. மேலும், முந்தைய இரு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிகமிக குறைவான குழிகளைப் போட்டு அகழாய்வினை மேற்கொண்டது வரலாற்று ஆர்வலர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.

நிறைவாக, 3ம் கட்ட அகழாய்வு அறிக்கையை அளித்த ஸ்ரீராம் கீழடியில் கட்டடங்களின் தொடர்ச்சி ஏதுமில்லை என தெரிவித்ததை அடுத்து, 3ம் கட்ட அகழாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன. மழைக் காலங்களில் அகழாய்வு பணிகளுக்காக தோண்டப்படும் குழிகள் மூடப்படுவது சாதாரண நிகழ்வாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கீழடியில் 4ம் கட்ட அகழாய்வுப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும், அனைவரையும் கவரும் வகையில் கீழடியில் சர்வதேச தரத்திலான கண்காட்சி அமைக்கப்படும் என்றும் பாண்டியராஜன் உறுதியளித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: