தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 177 அரசு மருத்துவர்களுக்கு விருது, பதக்கங்கள்!

தென்னிந்தியாவில் முதல் முறையாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் மருத்துவத்துறையைத் தொடங்கி, அந்தத் துறையில் பட்டமேற்படிப்பையும் தொடங்கிய டாக்டர் கி.நாராயணசாமிக்கு சிறந்த டாக்டருக்கான விருதை வழங்குகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். உடன் சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்.

தமிழக மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் விருது, பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ் நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடந்தது. விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் கலந்து கொண்டு விருதுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். சிறப்பாக பணியாற்றிய 12 மருத்துவர்களுக்கு (அரசுக்கு உதவிய தனியார் மருத்துவர்கள் உட்பட) விருதுகளும், பதக்கம், 50 ஆயிரம் ரூபாய்கான காசோலை வழங்கப்பட்டன. சிறப்பாக சேவை புரிந்த 165 அரசு மருத்துவர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன.

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் (பொறுப்பு) பெ.அமுதா, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக நிர்வாக இயக்குநர் பு. உமாநாத், தேசிய சுகாதார இயக்கத்தின் குழும இயக்குநர் டரேஸ் அகமது, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் கி.செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறப்பாக பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: