27 ஆண்டுகளுக்குப் பிறகு 11–வது உலகத் தமிழ் மாநாடு தமிழகத்தில் நடக்க வாய்ப்பு! 22–ந் தேதி ஆய்வுக்குழு ஆலோசனை

27 ஆண்­டு ­க ­ளுக்­குப் பிறகு,தமிழ்­நாட்­டில் 11–­வது உல­கத் தமிழ் மாநாட்டை நடத்த முயற்சி மேற்­கொள்ளப்­பட்­டுள்­ளது. இம்­மா­தம் 22–ந் தேதி இது ­கு­றித்து உயர்நிலை ஆய்­வுக் குழு ஆலோ­சனை நடத்­து­கி­றது.


உல­கத் தமிழ் மாநாடு குறிப்­பிட்ட கால இடை­வெளி­யில் நடத்­தப்­பட்டு வரு­கி­றது. 1966–ம் ஆண்டு,மலேசி­யா­வில் முதல் மாநா­டும் 1968–ல் சென்­னை­யில் இரண்­டாம்மாநா­டும் 1970–ல் பாரீ­சில் மூன்­றாம் மாநா­டும் 1974–ல் இலங்­கை­யில்நான்­காம் மாநா­டும் 1981–ம் ஆண்டு மது­ரை­யில் ஐந்­தாம் மாநா­டும் 1987–ல் மீண்­டும் மலே­சி­யா­வில்ஆறாம்மாநா­டும் 1989–ல் மொரீ­சி­ய­சில் ஏழாம்மாநா­டும் 1995–ல்தஞ்­சா­வூ­ரில் எட்­டாம் மாநா­டும் 2015–ல் மறு­ப­டி­யும் மலே­சி­யா­வில் ஒன்­ப­தாம் மாநா­டும் 2019–ல் சிகா­கோ­வில் பத்­தாம் மாநா­டும் நடத்­தப்­பட்­டுள்­ளன.


தமிழ்­நாட்­டில் அண்ணா முத­லமைச்­ச­ராக இருந்­த போது, இரண்­டாம் உல­கத் தமிழ் மாநா­டும் எம்.ஜி.ஆர். முத­லமைச்­ச­ராக இருந்­த போது,ஐந்­தாம்உல­கத்தமிழ் மாநா­டும் ஜெய­ல­லிதா முத­லமைச்­ச­ராக இருந்­தபோது, எட்­டாம் உல­கத் தமிழ் மாநா­டும் நடை­பெற்­றுள்­ளன என்­பது குறிப்­பிடத்­தக்­கது. கரு­ணா­நிதி முத­லமைச்­ச­ராக இருந்­தபோது ,2010–ம் ஆண்டு, கோவை­யில் உல­கத் மிழ்மாநாட்டை நடத்த முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொண்டார். ஆனால் இந்த முயற்சி பயன் அளிக்­க­வில்லை. இதை­ய­டுத்து 2010–ம் ஆண்டு கோவை­யில்உல­கத்தமிழ் செம்மொழி மாநாட்டை கரு­ணா­நிதி நடத்தினர் என்பது குறிப்­பிடத்­தக்­கது . இப்போது 11–­வதுஉல­கத்தமிழ் மாநாட்டை நடத்த பூர்­வாங்க முன்­னெ­டுப்பு மேற்­கொள்ளப்­பட்­டுள்­ளது. இம்­மா­தம் 22–ந் தேதி தமிழ் ஆய்­வுக்கான சர்­வதேச சங்­கம் இது­ தொடர்­பாகஆய்வுநடத்­து­கி­றது. இதன் ஒருங்­கிணைப்­பாள­ர் கே.எஸ்.ராதா­கி­ருஷ்­ணன், தி.மு.க.வின் செய்­தித் தொடர்பா­ள­ராக உள்­ளார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.


தமிழ்­நாட்­டில் 11–­வது உல­கத் தமிழ் மாநாட்டை நடத்த முதல்­வர் மு.க.ஸடாலின் விரும்­பு­கி­றார் என்று கூறப்­படு­கி­றது. இதன் அடிப்­ப­டை­யில் கே.எஸ்.ராதா­கி­ருஷ்ணன் முன்­னெ­டுப்­பு­களைமேற்­கொண்டு வரு­வ­தாகசொல்­லப்­ப­டு­கி­றது. 11–­வது உல­கத் தமிழ் மாநாட்டை
நடத்த வேறு சில நாடு­க­ளும் முயற்சி மேற்­கொண்­டுள்ளன. 136 நாடு­க­ளைச் சேர்ந்த தமிழ் ஆய்­வாளர்­கள், 11–­வதுஉல­கத்தமிழ்மாநாட்­டில் பங்­கேற்­பார்­கள் என்றுதெரி­கி­றது. 11–­வது உல­கத் தமிழ் மாநாட்டை தமிழ்­நாட்­டில் நடத்த இதற்குமுன் பத­வி­யில் இருந்த எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யி­லான அ.தி.மு.க. அரசு முயற்சி மேற்­கொண்டது. ஆனால் கொரோனா தாக்­கம் கார­ண­மாக இம்­மு­யற்சிஈடே­றா­மல் போய்­விட்­டது. இந்­நி­லை­யில், அடுத்தஆண்டு௧௧–­வதுஉல­கத்தமிழ்மாநாட்டை நடத்த பிர­கா­சமான வாய்ப்­புள்­ளது. அனேக­மாக இது தமிழ்­நாட்­டி­லேயே நடை­பெ­றும் என்று தமிழ்ஆய்­வாளர்­கள் மற்­றும் ஆர்­வலர்­கள் பலர் நம்­பிக்கைதெரி­வித்­துள்­ளனர்.

நன்றி : மாலை முரசு

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: