அதிமுக, பாஜக வெளிநடப்புக்கு மத்தியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது!

சென்னை : ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜகவை தொடர்ந்து அதிமுக வெளியேறிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

*தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியதும்  முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்க்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

*இதைத் தொடர்ந்து வேளாண் சட்டங்கள் குறித்து அவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,’3 வேளாண் சட்டங்களும் அழிக்கக் கூடியது. சட்டங்கள் அனைத்தும் விவசாயிகளின் நலனுக்கு உகந்தது அல்ல.எனவே 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாக வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. குறைந்தபட்ச ஆதார் விலை குறித்து 3 சட்டங்களில் ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை. 3 சட்டங்களையும் முழுமையாக எதிர்க்கிறோம்.வேளாண் சட்டங்கள் தனியாருக்கு சாதகமாகவும் விவசாயிகளுக்கு விரோதமாகவும் உள்ளன,’என்றார்,

*முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

*இருப்பினும் காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக, தாவக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது.

*ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>