Archive: Page 7
தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரைக்கான நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்!!
தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரைக்கான நிகழ்ச்சி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை : ஒரு பிளாஸ்டிக் பையானது மக்களால் சராசரியாகப் பயன்படுத்தப்படும் நேரம்… Read more
சென்னை ராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் தமிழில் பாடல் வடிவக் கல்வெட்டின் சிறப்பம்சங்கள்!!!
சென்னையின் கலெக்டர் பிரான்சிஸ் வைட் எல்லீஸ் 1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது அங்கு 27 கிணறுகள் வெட்டி வைத்தார். அவற்றுள் ஒன்று சென்னை ராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ளது. அக்கிணற்றில் எல்லீசின் திருப்பணி பற்றிய செய்தி தமிழில் பாடல்… Read more
இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து அரசாணை வெளியீடு
சென்னை: இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் இயல், இசை, நாடகம் பிரிவுகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. கலைஞரின் 97வது பிறந்தநாளை ஒட்டி 3 தமிழறிஞருக்கு இலக்கிய மாமணி விருது… Read more
தமிழறிஞர்,சைவ பெரியவர், திரு. வி. காவை சைவ பெரியாராக உருவாக்கியவர், சதாவதானி பட்டம் பெற்றவர், ஐயா கதிரைவேற் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!
நா. கதிரைவேற்பிள்ளை (டிசம்பர் 21, 1871 – 1907) இலங்கைத் தமிழறிஞர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். ‘தமிழ்த் தென்றல்’ திரு. வி. க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர். சதாவதானி எனப் போற்றப் பெற்றவர். பிறப்பு கதிரைவேற்பிள்ளை பருத்தித்துறை, மேலைப்புலோலியில் வாழ்ந்த நாகப்பபிள்ளை என்பவருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் 1871-ஆம் ஆண்டு பிறந்தார். அயலில்… Read more
ராஜபக்ஸக்களின் ராஜதந்திரத்திரத்திற்கு, குடுமிச் சண்டையில் குத்தி முறியும் தமிழ்த் தலைமைகள் ஈடுகொடுப்பார்களா?
“இது முடிவல்ல முடிவின் ஆரம்பம்” இராமர்பாலத்தில் சீனத் தூதுவர்! ராஜபக்ஸக்களின் ராஜதந்திரத்திரத்திற்கு, குடுமிச் சண்டையில் குத்தி முறியும் தமிழ்த் தலைமைகள் ஈடுகொடுப்பார்களா? இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong வட மாகாணத்திற்கான பயணத்தை நிறைவு செய்ய தேர்ந்தெடுத்த இடம், இலங்கைக்கும் இந்தியாவிற்கும்… Read more
தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும்!: மக்களவையில் எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தல்..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மக்களவையில் திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பாமல்… Read more
தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல் :மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது.. வேலை நிறுத்தத்தை அறிவித்த புதுக்கோட்டை மீனவர்கள்!!
புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்ததைக் கண்டித்து புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.பாக் ஜலசந்தி கடலில் கடந்த 18ம் தேதி இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர், மன்னார் வளைகுடா… Read more
அரசிதழ் பதிவில் உள்ள கிராமங்களை சரிபார்த்து ஜல்லிக்கட்டுக்கு கலெக்டரே அனுமதி வழங்க வேண்டும்
அரசிதழ் பதிவில் உள்ள கிராமங்களை சரிபார்த்து, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை அந்தந்த மாவட்ட கலெக்டர்களே வழங்க வேண்டும் என ஜல்லிக்கட்டு பேரவை பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு பேரவையின் 15வது பொதுக்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாநிலத்தலைவர் ராஜசேகரன்… Read more
சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர், காந்தியவாதி சர்வோதாயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர் ஐயா கோவை அய்யாமுத்து கவுண்டர் நினைவு நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!
கோவை அய்யாமுத்து (C. A. Ayyamuthu) (டிசம்பர் 1898- டிசம்பர் 21, 1975 ) ஒரு தமிழ் எழுத்தாளர், காந்தியவாதி மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்; சர்வோதயா இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். காந்தியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். ஈ. வே. ராமசாமியின் நண்பராக இருந்தார். இவரது ’எனது நினைவுகள்’ என்ற தன்வரலாற்று நூல் தமிழக அரசியல்… Read more
தமிழ்நாட்டில் அருகிவரும் தோல்பாவைக் கூத்தை மீட்கும் முயற்சி: நிழல் வடிவுக்கு ஒளியூட்டும் தன்னார்வலர் குழு…!!
தமிழ்நாட்டில் அருகிவரும் நிலையிலுள்ள பாரம்பரிய தோல்பாவைக் கூத்துக் கலையை காலத்திற்கேற்ப நவீனப்படுத்தி கலையையும், கலைஞர்களின் வாழ்வையும் மீட்டு எடுக்கும் புதிய முயற்சி தன்னார்வலர்களால் ஈரோட்டில் தொடங்கப்பட்டுள்ளது. சங்க இலக்கியங்கள் முதல் திருக்குறள் வரை பல்வேறு நூல்களில் சுட்டிக் காட்டப்படும் பாவைக்கூத்தின் ஒரு… Read more