செந்துறை அருகே உள்ள கீழமாளிகை கிராமத்தில் கோயில்களுக்கு சொந்தமான காலி இடங்களில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகளை கிராமமக்கள் ஆர்வத்துடன் நட்டு வைத்தனர்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் வளாகங்கள், கோயில்களின் காலியிடங்கள், அரசு புறம்போக்கு இடங்களில் மாவட்டத்தை பசுமையாக்கும் நோக்கில் 1 லட்சம் மரக்கன்றுகள் மற்றும் 60 ஆயிரம் பனைவிதைகள் நடும் திட்டத்தினை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சில தினங்களுக்கு முன் மணக்கால் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, செந்துறை அருகே கீழமாளிகை கிராமத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் மூலம் பணியாற்றும் பணியாளர்களை கொண்டு பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் செல்வி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில், கீழமாளிகை கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் மரக்கன்றுகளையும், பனை விதைகளையும் நட்டு வைத்தனர்.
பரமத்திவேலூர் அடுத்த கொந்தளம் அரசுப் பள்ளி மைதானத்தில், மரக்கன்றுகள் நடுவதற்கு தோண்டிய குழியில் முதுமக்கள்தாழி மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தாசில்தாரிடம் பள்ளி நிர்வாகம் அவற்றை ஒப்படைத்தது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கொந்தளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சுமார் 2 ஏக்கர் அளவுக்கு விளையாட்டு மைதானம் உள்ளது.இந்த மைதானத்தின் ஒரு பகுதியில் மாணவர்கள்…
போடி அருகே சிலமலை கிராம ஊராட்சியில் சூலப்புரம், மேலசூலப்புரம், கீழ சூலப்புரம் காலனிகளை உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் 8 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்குள்ள சமூக ஆர்வலர் முருகன் உள்ளிட்ட பலர் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், பருவமழை தவறாமல் பெய்து குடிநீர், விவசாயம் மேம்பட வேண்டும் என்பதுடன் 2022ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் வகையில் 12 ஆயிரம் பனை விதைகள் ந ட்டு வைத்து வளர்க்க முடிவு செய்தனர். அதன் முதற்கட்டமாக…
குளக்கரை பகுதிகளில் பனை விதைகளை நட்டு வைத்து பாரம்பரியத்தை மீட்போம் என நாளைய தலைமுறை பயன்பெறத் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அருமையான தொடக்கத்தை வைத்துள்ளார். பனைமரத்தைப் பாதுகாக்கும் விதமாகத் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் பனை மரங்களை வெட்டுவது தடை செய்யப்படும் எனவும் 3 கோடியில் பணி மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு வேலன் பட்ஜெட்டில் அறிவித்தது. இந்நிலையில் பனைமரத்தின் அவசியங்களும், அதில் உள்ள…
In "தமிழர் செய்திகள்"
Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: Cancel reply