விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு சிகிச்சை

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவருக்கு சிறுநீரக தொற்று காரணமாக தொடர் சிகிச்சை மேற்கொள்ள பரோல் வழங்கும்படி தமிழக முதல்வருக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் மனு அளித்திருந்தார்.  அதன்பேரில் கடந்த மே மாதம் 28ம் தேதி ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து, ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  

தொடர்ந்து சிகிச்சை தேவைப்பட்டதால் அற்புதம்மாள் விடுத்த கோரிக்கையின்பேரில் 4வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் நேற்று விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிகிச்சைக்குபின் வீடு திரும்புவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>