தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடக்க உள்ளதாக, கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. திருவள்ளூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நவம்பர் 8ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கலந்து பங்கேற்க மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளாக இருத்தல் வேண்டும். திருக்குறள் ஒப்புவித்தலில் கலந்துகொள்ளும் மாணவர்கள், தமிழ் வளர்ச்சி துறையால் வழங்கப்படும் பரிசை, இதற்கு முன்பு பெற்றவராக இருத்தல் கூடாது.  இதில், கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் 2ம் தளத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நவம்பர் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினகரன்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: