நேற்று மாலை (20.11.2021) கனடா தேசியக் கூட்டமைப்பு ரொறன்ரோவில் நடத்திய பொதுக் கூட்டம் போது மண்டபத்தின் பின்புறம் நின்று கொண்டிருந்தவர்கள் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்களின் பேச்சைத் தொடரவிடாமல் உரத்த குரலில் எதிர்ப்பு முழுக்கங்களை எழுப்ப தொடங்கினார்கள்.
கூட்டத்தில் அரை மணித்தியாலம் பேசிய மற்றொரு இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எந்தக் குறுக்கீடும் இல்லாது பேசி முடித்தார். அவருக்கு பலத்த கைத்தட்டலும் கிடைத்தது. அவையோர் எழுத்தில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும் என்று பலமுறை சொல்லப்பட்டது.
திரு. சுமந்திரனை பேச்சை தொடரவிடாமல் உரத்த குரலில் முழுக்கங்களை எழுப்ப யதனால், கூட்டத்தை இடையிலேயே முடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. கனாடவில் இப்படி நடப்பது இதுவே முதல் தடவை ஆகும்.
கூட்டம் தொடங்கு முன்னர் மண்டபத்துக்கு எதிர்ப்புறமாக புலிக்கொடியுடன் பலர் நின்றிருந்தார்கள்.
கனடிய தமிழ்ச் சமூகம் சட்டத்தை மதிக்கிற ஒரு சமூகம். இந்த நாட்டில் எல்லோருக்கும் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை நூறு விழுக்காடு இருக்கிறது. கனடா நாட்டில் அமைதியான முறையில் எதிர்ப்பைக் காட்ட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. கனடா ஒரு சனநாயக நாடு என்ற முறையில் அமைதியான முறையில் எதிர்ப்பைக் காட்ட சட்டம் அனுமதிக்கிறது.
இன்றைய பூகோள அரசியல் சூழலில் தமிழ் மக்களது உரிமைகளை சனநாயக வழிமுறையில் – பேச்சு வார்த்தைகள் மூலம் – வெளிநாடுகளின் ஆதரவுடன் தான் பெறமுடியும் என்பதாக கருத்து சொன்னரர்கள்.