தமிழக காவல் துறையின் 57 வது மாநில அளவிலான தடகள போட்டி: தமிழக ஆயுதப்படை அணி சாம்பியன்!

தமிழக காவல் துறையின் 57 வது மாநில அளவிலான தடகள போட்டி: தமிழக ஆயுதப்படை அணி சாம்பியன்!

தமிழக காவல் துறையின் 57 வது மாநில அளவிலான தடகள போட்டி: தமிழக ஆயுதப்படை அணி சாம்பியன்!

தமிழக காவல் துறையின் 57 வது மாநில அளவிலான தடகள போட்டி கோவை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 3 நாளாக நடந்தது. இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயுதப்படை, அதிரடிப்படை, சென்னை பெருநகரம், வடக்கு, மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மண்டலம் உள்பட 7 காவல் மண்டலங்களை சேர்ந்த 321 போலீசார் பங்கேற்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா பரிசு வழங்கினார். விழாவில், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், ஆயுதப்படை ஐ.ஜி ஆயுஷ் மணி திவாரி, கோவை சரக டி.ஐ.ஜி தீபக் தமோர், கோவை மாவட்ட எஸ்.பி மூர்த்தி, சிறப்பு காவல்படை கமாண்டன்ட்கள் சுப்ரமணியம், ஜான்சன் ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்போட்டியில், ஆண்கள் பிரிவில், தமிழக ஆயுதப்படை அணி 198 புள்ளிகளும், பெண்கள் பிரிவில் 76 புள்ளிகளும் பெற்றது. ஆயுதப்படை அணி 274 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

மத்திய பிரிவு போலீஸ் அணி பெண்கள் பிரிவில் 104 புள்ளிகளும், ஆண்கள் பிரிவில் 43 புள்ளிகளும் பெற்றது. மொத்தமாக 147 புள்ளிகள் பெற்றது. பெருநகர சென்னை அணி ஆண்கள் பிரிவில் 96 புள்ளிகளும், பெண்கள் பிரிவில் 123 புள்ளிகளும் பெற்றது. மொத்தம் 219 புள்ளிகளுடன் இந்த அணி இரண்டாம் இடம் பெற்றது. பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

தமிழக கமாண்டன்ட் அணி 36 புள்ளிகளும், வடக்கு மண்டல அணி 16 புள்ளிகளும், தெற்கு மண்டல அணி 94 புள்ளிகளும், மேற்கு மண்டல அணி 108 புள்ளிகளும் பெற்றது. ஆண்களுக்கான தனிநபர் சாம்பியன் பட்டத்தை ஆயுதப்படையை சேர்ந்த அதிர்ஷ்டம் என்பவரும், பெண்கள் பிரிவில், தெற்கு மண்டல அணியை சேர்ந்த கிருஷ்ணரேகா என்பவரும் வென்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: