கொற்கை துறைமுகம் கி.மு.6-ம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நெல்லை நகரில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் ”பொருநை” தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும். பொருநை ஆற்றங்கறை நாகரீகம் 3200 ஆண்டுகள் பழமையானது என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் எழுதப்பட வேண்டும்.
கேரள மாநிலம் பட்டணம் ஆந்திரா வேங்கி, ஒடிசாவின் பாலூர், கர்நாடகாவில் தலைக்காடு உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளில் ஆய்வு செய்வோம். இந்தோனேஷியா, தாய்லாந்து மலேஷியா, வியட்நாம் நாடுகளில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை தேடி உலகெங்கும் பயணம் செய்வோம். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் துவங்கி எழுத வேண்டும் என்பதை சான்றுகளின் அடிப்படையில் அறிவியல் வழி நின்று நிறுவுவதே இந்த அரசின் லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி :தினதந்தி