மதுரை தென்னிந்திய வெள்ளாளர் உறவின் முறை சங்கம் சார்பில் சிம்மக்கல்லில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வெண்கல சிலையை அமைச்சர் தியாகராஜன் திறந்து வைத்தார்.
வ.உ.சி., சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மதுரை ஆதினம்ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், எம்.பி.,சு.வெங்கடேசன், வ.உ.சி., யின் பேரன் சிதம்பரம், எம்.எல்.ஏ.,க்கள் தளபதி,பூமிநாதன், சங்கத் தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாண்டியராஜன், செயலாளர் அசோக்ராஜ், பொருளாளர் பெரியசாமி, நிர்வாகிகள் தனபாலன், சொக்கர், திண்டுக்கல் வ.உ.சி., பேரவை நிர்வாகி சந்திரசேகரன், பட்டுக்கோட்டை வெள்ளாளர் மகா சேனை நிறுவனத் தலைவர் அண்ணாத்துரை, மதுரை வழக்கறிஞர்கள் பேரவை செயலாளர் நெடுஞ்செழியன் பங்கேற்றனர்.
இளைஞரணி தலைவர் சொக்கலிங்கம் நன்றி கூறினார். சிலைக்கு முன் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தினர் பொங்கல் வைத்தனர்.மதுரை விக்ரம் குரூப் சேர்மன் சீனிவாசன், ஜெய்ஜோதி புட்ஸ் லிட்., நிர்வாக இயக்குனர் ஜெய்சங்கர், தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்க மாநில தலைவர் திருமுருகன், பாண்டியன் அப்பளம், முருகன் இட்லி, குமார் மெஸ் நிர்வாகிகள், தல்லாகுளம் வ.உ.சி., பேரவை நிர்வாகி ராமச்சந்திரகுமார், லிங்கா பாடி பில்டிங் நிறுவனர் சோணைமுத்து குடும்பத்தினர், ஐயப்பன் சா மில்ஸ் தேவா பர்னிச்சர்ஸ் சந்தானம், ஜென்எலக் பவர் சிஸ்டம்ஸ், மாருதி குரூப்ஸ் மாருதி, பாலகிருஷ்ணன், திண்டுக்கல் அகில இந்திய வ.உ.சி., அறக்கட்டளை பொருளாளர் சிவ சண்முகராஜன்,எழுமலை லட்சுமி ஜூவல்லர்ஸ் பாண்டியன், பாரதியார் கல்வி நிறுவன தாளாளர் பொன். கருணாநிதி, மதுரை ஆவண எழுத்தர் கண்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்