இந்தியாவின் முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, தேசிய அளவிலும் ஆசிய அளவிலும் பல பதக்கங்களைக் கைப்பற்றியவர். சென்னையைச் சேர்ந்தவரான இவர், சர்வதேச சேட்லைட் உலகக்கோப்பை வாள்வீச்சு போட்டியில், முதன் முறையாக தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
சர்வதேச சேட்லைட் உலகக் கோப்பை வாள்வீச்சு பந்தயம் ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்றது. இதன் ‘Sabre’ பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை சி.ஏ. பவானி தேவி, இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை சாரா ஹம்சனுடன் மோதினார். இதில் இந்திய வீராங்கனை பவானி தேவி, 15க்கு 13 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனையை வீழ்த்தினார்.
உலக அளவில் வாள் வீச்சில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பவானி தேவி பெற்றார். இதற்கு முன்பு அவர் ஆசிய சேட்லைட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.