3 எழுத்து வடிவங்களுடன் ‘அமுது மகிழ்மொழி’

 
 3 எழுத்து வடிவங்களுடன் 'அமுது மகிழ்மொழி'
 
திருப்பூர் ‘கனவு’ இலக்கிய அமைப்பு சார்பில், புதிய நுால் வெளியீட்டு விழா, பாண்டியன் நகர் சக்தி அறக்கட்டளை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கவிஞர் மதுராந்தகன் வரவேற்றார். கவிஞர் பொன் சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர். இளம் எழுத்தாளர் திருப்பூர் பிரபாகரனின், ‘அமுது மகிழ்மொழி’ என்ற நுாலை, மூன்று எழுத்து வடிவங்களில் வெளியிடப்பட்டது.நுாலை வெளியிட்டு, எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் பேசுகையில், ”இளம் எழுத்தாளர் தன்னுடைய புதிய முயற்சியாக, ஒரு நுாலை, மூன்று எழுத்து வடிவங்களில் கொண்டு வந்துள்ளார்.பழங்கால தமிழ் எழுத்து வகைகளான தமிழி (தமிழ் பிராமி), கி.பி., எட்டாம் நுாற்றாண்டை சார்ந்த வேள்விக்குடி செப்பேட்டில் பயன்படுத்தப்பட்ட பாண்டியர் கால வட்டெழுத்து மற்றும் தற்போதைய தமிழ் எழுத்து என, மூன்று எழுத்து வடிவங்களில் வெளியிட்டுள்ளார்.’அமுது மகிழ்மொழி’ என்ற தலைப்பில், நிகழ்கால சம்பவங்களை, அனுபவங்களை கவிதையாக்கியிருக்கிறார்” என்றார்.
 
நன்றி :தினமலர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: