திருவள்ளூர் அருகே பள்ளி வளாகத்தில் 12-ஆம் நூற்றாண்டை சேர்ந்த 4 சோழர் கால கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
திருவள்ளூர் மாவட்டம் அண்ணாமலைச்சேரி மீனவ கிராமத்தில் பள்ளிக்கான கட்டடம் கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, கற்கள் போன்ற பொருட்கள் தட்டுப்பட்டுள்ளது, அவற்றை எடுத்து பார்த்த போது, 3 அடி உயரத்தில் ஒரு பெருமாள் சிலை, ஒரு பைரவர் சிலை, ஒரு தேவி சிலை மற்றும் ஒரு நந்தி சிலை என 4 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
உடனடியாக பொன்னேரி வட்டாட்சியர் ஐவண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வருவாய் துறையினர் மேலும் தோண்டி பார்த்த போது, அங்கு கோயில் இருந்ததற்கான அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே சிலைகளை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வருவாய் துறையினர் முயன்ற போது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சிலைகளை அரசிடம் ஒப்படைக்க முடியாது எனவும், கோயில் கட்டி வழிப்பட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அரசு கருவூலத்தில் சிலைகளை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர். கண்டெடுக்கப்பட்ட சிலைகளை ஆய்வு செய்தால் முழுமையான தகவல்கள் தெரிய வரும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.