உலகத் தமிழர் பேரவை, சென்ற 09-08-2019 தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு ‘சி.எம். (எ) கேப்பமாரி’ என்னும் படத்தின் பெயரை தடை கோரிய விண்ணப்பித்திருந்தது. அதனை ஏற்றுக் கொண்ட தனிப் பிரிவு, இன்று அவ்விண்ணப்பத்தை சென்னை காவல்துறை ஆணையருக்கும், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய (திரைப்பட சென்சார் போர்ட்) பிராந்திய அலுவலருக்கும் விசாரணைக்காக அனுப்பியுள்ளதாக உலகத் தமிழர் பேரவை-க்கு செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.
சனநாயக முறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்டு தமிழகத்தின் முதல்வர் ஒருவரை மறைமுக விளம்பரத்திற்காக கொச்சையாக விமர்சிப்பதை எவ்வகையிலும் ஏற்க இயலாது. அதனால், இவ்வகை தலைப்பிட்டு வரவிருக்கும் திரைப்படத்தை தடை செய்யப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும். கோரிக்கை நிறைவேறும் வரை உலகத் தமிழர் பேரவை தொடர்ந்து போராடும்.
அக்னி சுப்ரமணியம்
தலைவர்
உலகத் தமிழர் பேரவை