திருவள்ளுவர் நாள் பேரணியில் தமிழர்கள் திரளாக பங்கேற்க ”பெங்களூரு தமிழ்ச் சங்கம்” அழைப்பு!

திருவள்ளுவர் நாள் பேரணியில் தமிழர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு!

திருவள்ளுவர் நாள் பேரணியில் தமிழர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு!

பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பெங்களூரில் ஜன.28-ஆம் தேதி நடைபெறும் திருவள்ளுவர் நாள் விழா மற்றும் பேரணியில் கர்நாடகத் தமிழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அச்சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் அழைப்பு விடுத்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

2009-ஆம் ஆண்டு பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட பிறகு பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெங்களூரில் 40 லட்சத்துக்கும் அதிகமாக, கர்நாடகத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள்.

கர்நாடகத் தமிழர்களின் அடையாளமாக விளங்கும் பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் திருவள்ளுவரை போற்றுவதற்கு விழா எடுப்பதோடு, மொழிச் சிறுபான்மையினரான தமிழர்களுக்கு உரிமை பெற்று தருவதும் நமது தலையாய நோக்கமாக விளங்கி வருகிறது.

மேலும் கன்னடர்-தமிழர் இடையே நல்லிணக்கத்தை பேணி பாதுகாப்பதும் இந்த பேரணியின் முதன்மையான நோக்கமாகும். அந்த வகையில், நிகழாண்டுக்கான திருவள்ளுவர் நாள் விழா மற்றும் பேரணி வருகிற ஜன.28-ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10-மணிக்கு நடக்கவிருக்கிறது. இந்த பேரணியில் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், கர்நாடகத் தமிழர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும்.

பேரணியில் முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ரோஷன்பெய்க், முன்னாள் பிரதமர் தேவ கெளடா, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி, மேயர் ஆர்.சம்பத்ராஜ், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
ஆண்டுக்கொரு முறை நடைபெறும் திருவள்ளுவர் நாள் விழா மற்றும் பேரணியில் ஜாதி, மதம், கட்சி போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து தமிழர்களும் உற்சாகமாக கலந்து கொள்ள வேண்டும். தமிழ்ப் பணி மட்டுமல்லாது கன்னடப் பணியையும் தமிழ்ச் சங்கம் செய்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளில் 1.5 லட்சம் பேருக்கு கன்னடம் கற்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பேரணியில் கன்னடர்களும் கலந்து கொள்ளலாம் என்றார்.

பேட்டியின் போது உடனிருந்த மாமன்ற உறுப்பினர் ஏழுமலை கூறுகையில், ‘கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு அடைக்கலமாக விளங்கும் பெங்களூரு தமிழ்ச் சங்கம் நடத்தும் திருவள்ளுவர் நாள் பேரணியில் ஜாதி, மதம், அரசியல் கடந்து அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். தமிழன் என்ற உணர்வில் நமது உரிமைகளை வென்றெடுக்க தமிழ்ச் சங்கத்தின் தலைமையில் ஒன்றுபட வேண்டும். தமிழ்ச் சங்கத்தில் அனைவரும் உறுப்பினராக சேர வேண்டும்’ என்றார்.

பேட்டியின் போது, தமிழ்ச் சங்க செயலாளர் எஸ்.இராமசுப்ரமணியன், துணைச் செயலாளர்கள் அமுதபாண்டியன், பழனி, செயற்குழு உறுப்பினர் ராமசந்திரன், மு.சம்பத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: