குஜராத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுக்கான தொழிற்பயிற்சி அளிக்க ‛சர்தார் பவனை’ பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார்.
சர்தார் வல்லபாய் படேல், இந்தியாவின் பெருமையாக உள்ளார். செப்.,11 வரலாற்றில் நினைவு கூரத்தக்க நாள். மனித நேயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அதேநேரத்தில், நமக்கு மனித நேயம் குறித்தும் பாடம் கற்பிக்கப்பட்டது. செப்.,11 மிகவும் முக்கியம். 1983ம் ஆண்டு இதே நாளில் தான் சிகாகோ நகரில், மனிதநேயத்தின் பண்புகள் குறித்து விவேகானந்தர் பேசினார்.
ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுக்காக, தமிழ் படிப்புகள் தொடர்பாக பனாரஸ் ஹிந்து பல்கலையில், சுப்ரமணியபாரதி பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார், மேலும் பாரதியாரை 100 ஆவது நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்தி ஒரு டீவீட்டையும் பதிவிட்டிருந்தார், அதன் சாராம்சம் பின்வருமாறு, ‛‛பாரதியாரின் பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்,” என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
மகாகவி பாரதியாரின் நினைவு நாள் இன்று (செப்.,11) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில், பாரதியாரின் புகைப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். புதுச்சேரியில், பாரதியார் சிலைக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.