செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆந்திர காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர வனப் பகுதியில் செம்மரம் வெட்டுவதாக தமிழகத்தை சேர்ந்தவர்களை ஆந்திர காவல்துறை கைது செய்வதும், சுட்டுக் கொல்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், கடப்பா மாவட்டத்தில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஆந்திர போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஏர்பேடு என்ற வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டிக் கடத்துவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஆந்திர மாவட்ட செம்மரம் கடத்தல் தடுப்பு காவல் துறையினர் அந்த வனப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
அப்போது காடுகளுக்குள் இருந்தவர்களை காவல் துறையினர் சரணடைய கோரியதாகவும், ஆனால், கடத்தல் காரர்கள் காவல் துறையினர் மீது கற்களை வீசி எதிர்தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்தது செம்மரம் கடத்தல்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதாகவும், இதில், தமிழகத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த காமராஜ் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஆந்திர காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.