ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வதற்கான தீர்மானம் குறித்து ஆளுநரிடம் முறையிடுமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுவரை ஆளுநர் அந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் பேரறிவாளன் மனு மீதான விசாரணை நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு முன் வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், ஆளுநருக்கு நீதிமன்றத்தால் நேரடி அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் கூறினர்.

7 பேர் விடுதலை குறித்த கோப்பு ஆளுநர் முன்பு ஏன் இத்தனை மாதம் நிலுவையில் உள்ளது என கேள்வி எழுப்பி நீதிபதிகள், விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தார்.

இது குறித்து பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம் ; முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும்.

7 பேரையும் விடுவிப்பது குறித்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுவிட்டதை நினைவு கூர்ந்த அவர். மேலும் தமிழக அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த அதிகாரம் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளதோ அந்த அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இப்போது அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது ஆளுநர் தான் முடிவு செய்ய வேண்டும். தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், 7 பேர் விடுதலை செய்யவதில் ஆளுநர் பன்வாரிலால் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார். ஆளுநரின் முடிவை பொறுத்து தமிழக அரசு அடுத்தகட்ட தீர்மானத்தை முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>