ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!

ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: குடியரசுத் தலைவர் நிராகரிப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரிய தமிழக அரசின் மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களுடைய, வாழ்வின் பெரும்பகுதி சிறையில் கடந்த நிலையில், அவர்களைக் கருணை அடிப்படையில், விடுதலை செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் மனுவை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படி குடியரசுத் தலைவர் தமிழக அரசின் மனுவை நிராகரித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த ராம்நாத் கோவிந்த் மாநில அரசின் கோரிக்கையோடு, மத்திய அரசு உடன்படவில்லை எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>