ஃபேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக தமிழர் உருவாக்கிய புதிய செயலி!

ஃபேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக தமிழர் உருவாக்கிய புதிய செயலி!

ஃபேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக தமிழர் உருவாக்கிய புதிய செயலி!

இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. மேலும் இவ்வாறு பிரபலமாக இருக்கும் சமூக வலைத்தளங்கள் பலவும் ஒரே மாதிரியான அம்சங்களை வழங்குகின்றன.

அந்த வகையில் சமூக வலைதள சேவையில் புது அம்சங்களுடன் களம் இறங்கியிருக்கும் புதுவரவாக பிக்சாலைவ் (Pixalive) இருக்கிறது. தமிழகத்தின் கிருஷ்ணகிரியை சேர்ந்த பொறியாளரான ராஜசேகர் சுந்தரேசன் முயற்சியில் பிக்சாலைவ் சமூக வலைத்தளம் உருவாகி இருக்கிறது.

பிக்சாலைவ் சமூக வலைத்தளம் இந்தியாவில் உருவாகி இருக்கும் அழகிய, வண்ணமயமான மற்றும் புதுவித அம்சங்கள் நிறைந்த சேவையாக இருக்கிறது. டெக்ஸ்ட், ஆடியோ, புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றை பதிவு செய்ய முடியும். செயலியில் டிரெண்டிங் நாடு, மக்கள், புகைப்படம், வீடியோ, வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் உள்ளிட்டவற்றை பார்க்க முடியும்.

உலகில் வாய்ஸ் நோட் பதிவு செய்யும் வசதி கொண்ட முதல் சமூக வலைத்தளமாக பிக்சாலைவ் இருக்கிறது. வழக்கமான சமூக வலைத்தளங்களில் புகைப்படம், வீடியோ உள்ளிட்டவற்றுடன் டெக்ஸ்ட் பதிவிடும் வசதி வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், பிக்சாலைவ் செயலியில் புகைப்படம், வீடியோவுடன் வாய்ஸ் நோட் சேர்க்கலாம்.

பிக்சாலைவ் செயலியில் பயனர் பதிவிடும் போஸ்ட்கள் அனைத்தும் ஏழு நாட்களில் மறைந்துவிடும். செயலியில் வழங்கப்பட இருக்கும் புது அப்டேட் மூலம் போஸ்ட்கள் பயனர் விரும்பும் வரை செயலியில் இருக்கச் செய்யலாம். தற்சமயம் சில புது வசதிகளை வழங்கும் பிக்சாலைவ் செயலியில் விரைவில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்படுகிறது.

பிக்சாலைவ் வழங்கி இருக்கும் அம்சங்கள் வெறும் டீசர் மட்டும் தான், விரைவில் இந்த செயலியில் பல்வேறு புது வசதிகள் வழங்கப்படும் என பிக்சாலைவ் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜசேகர் சுந்தரேசன் தெரிவித்தார்.

பிக்சாலைவ் செயலி தற்சமயம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் கிடைக்கும் நிலையில் விரைவில் ஐ.ஓ.எஸ். மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

  • மாலை மலர்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>