‘சந்திரயான் -2’ தகவலை ஆய்வு செய்ய வாய்ப்பு

 
'சந்திரயான் -2' தகவலை ஆய்வு செய்ய வாய்ப்பு
 
பெங்களூரு :’சந்திரயான் – 2′ செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்களை ஆய்வு செய்ய, விஞ்ஞானிகளுக்கு வாய்ப்பு வழங்குவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது.

நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் – 1 மற்றும் சந்திரயான் – 2 என்ற இரு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பியுள்ளது. இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கை:நிலவு தோன்றிய காலம், நிலவில் உள்ள நீர், கனிமங்கள் ஆகியவை குறித்து, சந்திரயான் – 1 செயற்கைக்கோள் ஏராளமான தகவல்களை அனுப்பியது. இந்த தகவல்களைப் பயன்படுத்தி இந்திய ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது நிலவைச் சுற்றி வரும் சந்திரயான் – 2 செயற்கைக்கோள் எட்டு வித ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றின் வாயிலாக திரட்டப்பட்ட தகவல்கள் இரு கட்டங்களாக பொது ஆய்வுக்கு வெளியிடப்பட்டுஉள்ளன. அதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் தயாரித்த ஆய்வறிக்கைகள் அறிவியல் இதழ்களில் வெளிவந்துள்ளன.

சந்திரயான் – 2 அனுப்பும் தகவல்கள், இஸ்ரோ வலைதளத்தில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த தகவல்கள் அடிப்படையில் அறிவியல் ரீதியிலான ஆய்வுக்கும், சந்திரயான் – 2 சோதனைகளின் தரவுகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் இந்திய விஞ்ஞான சமூகத்திற்கு இஸ்ரோ வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளது. இதில் அங்கீகாரம் பெற்ற பல்கலைகள், கல்லுாரிகள், கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அனைவரும் பங்கு பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டிற்கு விற்க முயன்றதாக, ‘இஸ்ரோ’ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு தொடர்ந்த, கேரள முன்னாள் டி.ஜி.பி., சிபி மேத்யூஸ் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் திருவனந்தபுரம் மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சிபி மேத்யூசுக்கு நேற்று முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

நன்றி : தினமலர்

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: