தமிழ் பெண்களை இழிவாக பேசிய கேரளா அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – பெண்கள் ஒற்றுமை அமைப்பு

தமிழ் பெண்களை இழிவாக பேசிய கேரளா அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் - பெண்கள் ஒற்றுமை அமைப்பு

தமிழ் பெண்களை இழிவாக பேசிய கேரளா அமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும் – பெண்கள் ஒற்றுமை அமைப்பு

கேரள மூணாறு தேயிலை தோட்டத்தில் 3,500க்கும் அதிகமாக வேலை செய்யும் தமிழ் பெண்கள், அதிகாரிகளோடு உல்லாசமாக இருப்பதாகவும், அப்பெண்கள் மது அருந்துவதாகவும் இழிவாக பேசிய ஆளும் மாநில மார்க்ஸிஸ்ட் கட்சியின் கேரளா அமைச்சர் எம்.எம்.மணி மன்னிப்பு கோர வேண்டும் என்று தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கான அமைப்பான, ‘பெண்கள் ஒற்றுமை அமைப்பு’ கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


கேரள மூணாறு தேயிலை தோட்டத்தில் பெண் தொழிலாளர்கள் சுமார் 4000 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 90 சதவிதத்திற்கும் மேற்பட்டோர் தமிழ் பெண்களாவார்கள். இவர்களுக்கு ஊதிய நிர்ணயம் போன்ற பிரச்சனைகளையொட்டி, 2015-ம் ஆண்டு முதல் போராடி வெற்றியும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது போராட்டத்தை அப்பொழுதிலிருந்தே பல தொழிற்சங்கங்கள் மலுங்கடிக்க பார்த்து வந்தன.

அன்மையில், 22-ம் தேதி கேரளா அமைச்சர் எம்.எம்.மணி மூணாறு வந்த போதே பெண் தொழிலாளர்களை கொச்சைப்படுத்தி பொது மேடையில் பேசினார்.

அமைச்சரின் பேச்சை திரும்ப பெற்று, மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று பெண்கள் ஒற்றுமை அமைப்பு கோரி போராடி வருகின்றனர்.

கேரள மின் துறை அமைச்சர் திரு.எம் எம் மணி அண்மையில் தமிழர்களை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்து பதவி விலகக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரு.அதியமான் தலைமையில் (தமிழர் முன்னேற்றக் கழகம்) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் உலகத் தமிழர் பேரவை சார்பாக ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

கேரள மின் துறை அமைச்சர் திரு.எம் எம் மணி அண்மையில் தமிழர்களை இழிவுபடுத்தி பேசியதை கண்டித்து பதவி விலகக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் (26.04.2017) திரு.அதியமான் தலைமையில் (தமிழர் முன்னேற்றக் கழகம்) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் உலகத் தமிழர் பேரவை சார்பாக ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இவர்களுக்கு ஆதரவாக நடிகை மஞ்சு வாரியாரும் இப்பொழுது களத்தில் நிற்கிறார். கேரள காங்கிரசும், அமைச்சர் பதிவி விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டங்களை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.

ஆனால், அமைச்சரோ, தான் தவறாக பேசவில்லையென்றும், அதற்காக மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் கூறி வருகிறார். மன்னிப்பு கேட்க தனது கட்சி வேண்டுகோள் விடுத்தால், தனது பதவியை இராஜினாமா செய்ய போவதாகவும் மிரட்டி வருகிறார்.

உலகத் தமிழர் பேரவை, ஆளும் மாநிலக் மார்க்ஸிஸ்ட் கட்சியின் கேரளா அமைச்சர் எம்.எம்.மணி, எவ்வித நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: