மாதொரு பாகன் ஆங்கில நூலுக்கு வழங்கப்படும் விருதை தடை செய்யக்கோரி சாகித்திய அகடாமி அலுவலக முன்பு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

மாதொரு பாகன் ஆங்கில நூலுக்கு வழங்கப்படும் விருதை தடை செய்யக்கோரி சாகித்திய அகடாமி அலுவலக முன்பு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

மாதொரு பாகன் ஆங்கில நூலுக்கு வழங்கப்படும் விருதை தடை செய்யக்கோரி சாகித்திய அகடாமி அலுவலக முன்பு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

காலை புது டெல்லியில் உள்ள சாகித்திய அகடாமி தலைமை அலுவலகத்தில் கொங்குநாடு ஜனநாயக கட்சி (KJK) நிறுவனத் தலைவர் G.K.நாகராஜ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் S.K.கார்வேந்தன் ஆகியோர் அகடாமி-யின் செயலாளர் திரு. கே.சீனிவாசன் ராவ் அவர்களை சந்தித்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலைப் பற்றி அவதூறாக எழுதப்பட்ட”மாதொரு பாகன்”என்ற நூலின் மொழிபெயர்ப்பான “ONE PART WOMAN” என்ற நூலுக்கு வழங்கப்பட உள்ள சாகித்திய அகடாமி விருதை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு அவரை சந்தித்து, தமிழக மக்களின் கொந்தளிப்பான மனநிலையை எடுத்துரைத்துள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்த நூலுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் வரும் திங்கட்கிழமை, 28-ம் தேதி காலை 10 மணிக்கு புதுடெல்லியில் உள்ள ஃப்ரோசா சாலையில் உள்ள சாகித்திய அகடாமி அலுவலகத்திற்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொங்கு இளைஞர் பேரவை குமார ரவிக்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் S.K.கார்வேந்தன் மற்றும் கொங்குநாடு ஜனநாயக கட்சி (KJK) நிறுவனத் தலைவர் G.K.நாகராஜ் ஆகியோர் கலந்துகொள்ளும் இப்போராட்டத்தில் டெல்லியில் உள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தமிழர் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காத்திடவும், எதிர்ப்பை தெரிவிக்கவும் அனைவரையும் அழைத்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>